×

நாடு முழுவதும் பெட்ரோலிய பொருட்களுக்கு ஒரே விதமான வரி எப்போது? நாடாளுமன்றத்தில் தயாநிதிமாறன் கேள்வி

புதுடெல்லி: மக்களவை கேள்வி நேரத்தில், திமுக எம்.பி தயாநிதி மாறன் பேசியதாவது: அவையில் நிதியமைச்சர் இருக்கிறார். நாட்டின் பொருளாதாரம் ஏற்கனவே கீழ்நோக்கி சென்று கொண்டிருகிறது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி(ஜிடிபி) வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்துள்ளது. ஒரே நாடு, ஒரே வரி என நாம் கூறுகிறோம். ஆனால் பெட்ரோலிய பொருட்களுக்கு மாநிலங்கள் வெவ்வேறான வரி விதிக்கின்றன. ஜிஎஸ்டி அமல்படுத்தியபோது, பெட்ரோலிய பொருட்களும் ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவரப்படும் என நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பிரதமர் உறுதி அளித்திருந்தார். இந்த உறுதியை நிதியமைச்சர் எப்போது அளிப்பார்? நாடு முழுவதும் பெட்ரோலிய பொருட்களுக்கு ஒரே மாதிரியான வரி விதிப்பது எப்போது? இவ்வாறு அவர் கூறினார்.  இதற்கு பதில் அளித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ‘‘ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெறும்போதெல்லாம், பெட்ரோலியப் பொருட்களை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வருவது பற்றி விவாதிக்கப்படுகிறது. எவ்வளவு சதவீதம் வரிவிதிப்பு என்பது ஒருமனதாக முடிவு செய்யப்பட வேண்டும்.

எவ்வளவு சதவீத வரிவிதிப்பில் இதை கொண்டு வர வேண்டும் என்பதை ஜிஎஸ்டி கவுன்சில்தான் முடிவு செய்ய வேண்டும்’’ என்றார். இதேபோல் பிஎஸ்என்எல் விவகாரத்தில் தயாநிதி மாறன் பேசியதாவது: பிஎஸ்என்எல்லுக்கு நீங்கள் 4ஜி தரவில்லை. மாறாக, அந்த நிறுவனத்தில் 50 சதவீத ஊழியர்களுக்கு விஆர்எஸ் கொடுத்து அனுப்பி விட்டீர்கள். நாட்டின் பெருமைக்குரிய அந்த நிறுவனத்தை வேறு யாருக்காவது விற்க மாட்டீர்கள் என்பது என்ன நிச்சயம்? இதுபோல், பட்ஜெட் தாக்கலின்போது புறநானூறில் பிசிராந்தையார் பாடிய பாடலை கூறி நிதியமைச்சர் விளக்கம் அளித்தார். ஆனால், குடும்பத்தில் உள்ள ஆபரணங்களை எல்லாம் விற்று அந்த யானைக்கு உணவு அளிக்கிறீர்கள். அதுவும் லாபம் தரக்கூடிய ஆபரணங்கள் அவை. அந்த வகையில் சேலம் ஸ்டீலை தனியார் மயம் ஆகப்போகிறது. இதுபோல்தான் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனமும். வரி குறைப்பில் கார்ப்பரேட் நிறுவனங்கள் மட்டும் ஏன் பயன்பெறுகின்றன? ஏன் சாமானியர்கள் பயன் பெறுவதில்லை? என்றார்.

Tags : Parliament ,country ,Dayanidhimaran , Petroleum products, same tax, Parliament, Dayanidhi Maran
× RELATED தாய்லாந்தில் ஒரே பாலின...