வேலூர் சிறையில் உண்ணாவிரதத்தை கைவிட 5வது நாளாக நளினி மறுப்பு

வேலூர்: வேலூர் பெண்கள் சிறையில், அதிகாரிகள் பேச்சு ேதால்வியை அடுத்து 5வது நாளாக நளினி உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
ராஜிவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் பெண்கள் சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி, விடுதலை தாமதம், பரோல் தாமதம் உள்ளிட்ட காரணங்களால் தன்னை கருணை கொலை செய்ய கோரி சிறைத்துறை மூலம் பிரதமருக்கு மனு அனுப்பி வைத்தார். தொடர்ந்து சாகும் வரை உண்ணாவிரதத்தை கடந்த 28ம் தேதி தொடங்கிய அவர், 5வது நாளாக நேற்றும் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார். அவரது உடல்நிலை  குறித்து மருத்துவர்களின் அறிக்கையை சிறைத்துறை ஏடிஜிபி மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கும் அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், உண்ணாவிரதத்தை கைவிடுமாறு நளினியிடம் சிறை அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதற்கிடையில் வேலூர் மத்திய சிறையில் உள்ள முருகன் அறையில் கடந்த அக்டோபர் மாதம் செல்போனை சிறைத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பான வழக்கு வேலூர் ஜே.எம்.1 கோர்ட்டில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதற்காக அவரை போலீசார் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆஜர்படுத்தினர். பின்னர் விசாரணையை வரும் 16ம் தேதிக்கு மாஜிஸ்திரேட் (பொறுப்பு) நிஷா ஒத்தி வைத்தார்.

Tags : Nalini ,jail ,Vellore ,Vellore Jail , Nalini refuses to fast,Vellore jail
× RELATED நளினி- முருகன் சந்திப்பு வேலூர் பெண்கள் சிறையில்