உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு அயோக்கியத்தனமானது : துரைமுருகன் பேட்டி

சென்னை:   திமுக பொருளாளர் துரைமுருகன் நேற்று அளித்த பேட்டி:உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு அயோக்கியத்தனமானது. நகராட்சி மற்றும் மாநகராட்சிகளுக்கு இந்த அரசு நிச்சயம் தேர்தலை நடத்தாது. இரண்டு கட்டமாக தேர்தல் அறிவித்திருப்பது, யாராவது தேர்தலை நிறுத்த நீதிமன்றத்தை நாட மாட்டார்களா என்ற எண்ணத்திலேயே அறிவிக்கப்பட்டுள்ளது. கிராம பஞ்சாயத்து தேர்தலை கூட இரண்டு கட்டமாக நடத்துவதாக அறிவித்துள்ளார்கள். வாக்குப்பதிவின்போது வன்முறையை தூண்டவே இதுபோன்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அரசு கொள்ளை அடிக்கிறது. தேர்தலை நடத்தினால் அவ்வாறு கொள்ளை அடிக்க முடியாது. எனவே இவர்கள் தேர்தலை நடத்த மாட்டார்கள். . இப்போது அனைத்து அமைப்புகளுக்கும் சேர்த்து தேர்தல் நடத்தட்டும், சந்திக்க தயார். அரசு அறிவித்துள்ளது தான் இறுதி முடிவு என்றால் நிச்சயமாக நீதிமன்றத்தை நாடுவோம். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை வந்ததும் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories:

>