×

பிறந்த நாள் கி.வீரமணிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: திராவிடர் கழக தலைவர் கி.வீரமணிக்கு, மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பிறந்த நாளை முன்னிட்டு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முகநூல் பதிவில் கூறியிருப்பதாவது:  பத்து வயதில், திராவிட இயக்கத்தின் திருஞான சம்பந்தராக அறிவொளியினால் ஆர்வம் மிகக் கொண்டு, மேடையில் முழங்கத் தொடங்கி, 87 வயதிலும் சுறுசுறுப்பான சுயமரியாதை இளைஞராய், இன-மொழி எழுச்சியூட்ட, நாள்தோறும் வலம் வருகிறார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி. அவர், சமூகநீதியின் சமரசமற்ற காவலர், தமிழினத்தின் தகுதி செறிந்த பாதுகாப்பு அரண். அவரது சிந்தனையும் சொல்லும் செயலும், உலகத் தமிழ் மானுடத்துக்கு மேலும் பல்லாண்டு தொடர வேண்டும். தந்தை பெரியார் உலகம் பயனுற வேண்டும் என்று அவர் பிறந்த நாளாம் இன்று வணங்கி வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Birthday K Veeramani MK Stalin ,Birthday K Veeramani , MK Stalin congratulates ,Birthday K Veeramani
× RELATED வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தேனா? அண்ணாமலை பேட்டி