×

திமுக தலைவரை புகழ்ந்து பேசிய பாஜக நிர்வாகி அரசகுமாருக்கு கட்சி நிகழ்ச்சிகள், விவாதங்களில் பங்கேற்க தடை!

சென்னை: திமுக கட்சி தலைவரை புகழ்ந்து பேசிய பாஜக மூத்த நிர்வாகி அரசகுமாருக்கு அக்கட்சி நிர்வாகம் தடை விதித்துள்ளது. கட்சி நிகழ்ச்சிகள் மற்றும் விவாதங்களில் அரசகுமார் பங்கேற்க தடை விதித்துள்ளது.

அரசகுமாரின் பேச்சு:

நேற்று புதுக்கோட்டையில் தி.மு.க எம்.எல்.ஏ பெரியண்ணன் இல்ல திருமண விழாவில் பங்கேற்று பேசிய தமிழக பாஜக துணைத் தலைவர் பி.டி.அரசகுமார், இறைவன் மீது ஆணையிட்டு சொல்கிறேன், எம்.ஜி.ஆருக்கு பிறகு, தான் ரசித்த ஒரே தலைவர் மு.க.ஸ்டாலின் தான் என்றார். தொடர்ந்து பேசிய அவர், ’முதல்வர் பதவியைத் தட்டிப்பறிக்கும் எண்ணம் திமுக தலைவருக்கு இல்லை. ஆட்சி அதிகாரம் ஜனநாயக முறைப்படி கிடைக்க வேண்டுமென காத்திருக்கிறார். காலம் கணியும், திமுக தலைவர் தமிழகத்தின் முதலமைச்சராவார். தமிழகத்தில் உள்ளாட்சியில் நல்லாட்சி தந்தவர் மு.க.ஸ்டாலின் என்று புகழாரம் சூட்டினார். அவர் முதல்வராக வேண்டும் என்று நினைத்திருந்தால்,  கூவத்தூர் அத்தியாயத்தின் போது அவர் அவ்வளவு எளிதாக செய்திருக்க முடியும். காத்திருப்பவர்கள், ஒரு நாள் தங்களுக்கு வேண்டியதை நிச்சயம் அடைவார்கள் என்பது ஒரு உண்மை. மு.க.ஸ்டாலின் விரைவில் அரியணையில் ஏறுவார். நாம்  அதையெல்லாம் பார்க்க போகிறோம்’ என்று தெரிவித்தார். இவரது பேச்சு அரசியல் தலைவர்கள் மத்தியில் பெரும் வியப்பை ஏற்படுத்தியது. மேலும், அவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில்  வைரலாக பரவி வருகிறது.

பாஜக-வின் தடை நடவடிக்கை:

இந்த நிலையில் தான், கட்சி கட்டுப்பாட்டை மீறியதாக அரசகுமார் மீது நடவடிக்கை எடுக்க தேசிய தலைமைக்கு தமிழக பாஜக கடிதம் எழுதியுள்ளது. மேலும், டெல்லியில் இருந்து பதில் வரும் வரை அரசகுமார் கட்சி நிகழ்ச்சிகளில், ஊடக விவாதங்களில் கலந்துகொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளதாக பாஜக தமிழக பொதுச்செயலாளர் கே.எஸ்.நரேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விவகாரம் பாஜகவினர் இடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரசகுமார் பேட்டி:

இது தொடர்பான விவரம் தெரிந்து பேசிய பாஜக துணை தலைவர் அரசகுமார், தனக்கு விதிக்கப்பட்ட தடை குறித்து ஊடகங்கள் மூலம்தான் தெரிய வந்துள்ளது என தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பாஜக தமிழக பொறுப்பாளர் முரளிதரரிடம் விளக்கம் அளித்துவிட்டதாகக் கூறினார். அதில், எந்த உள்நோக்கத்துடனும் தாம் பேசவில்லை என்று கட்சிக்கு விளக்கம் அளித்துள்ளார்.

Tags : Raju Kumar ,Raja Kumar ,BJP ,discussions ,administrator ,DMK , BJP, deputy aracakumar, barrier, katcinikalccikal, DMK leader MK Stalin
× RELATED தேர்தல் பணிமனையில் பாஜவினர் மோதல்: பாஜ...