பிரியங்கா காந்தியா? பிரியங்கா சோப்ராவா? குழம்பிய காங்கிரஸ் நிர்வாகி...சமூக வலைதளங்களில் வைரல்

டெல்லி: பிரியங்கா காந்தி வாழ்க எனக் குறிப்பிடுவதற்கு பதிலாக தவறுதலாக பிரியங்கா சோப்ரா வாழ்க என காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நிர்வாகி  ஒருவர் முழக்கமிட்டது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. டெல்லியில் நடந்த காங்கிரஸ் கட்சியின் நிகழ்ச்சியொன்றில், அக்கட்சியைச்  சேர்ந்த சுரேந்தர் என்பவர் முழக்கமிட்டார். அப்போது சோனியா காந்தி ஜிந்தாபாத்...காங்கிரஸ் கட்சி ஜிந்தாபாத்...ராகுல் காந்தி ஜிந்தாபாத்... என  வரிசையாக முழங்கியவர், அடுத்ததாக பிரியங்கா காந்தி ஜிந்தாபாத் என குறிப்பிடுவதற்கு பதிலாக பிரியங்கா சோப்ரா ஜிந்தாபாத் என தவறுதலாக  குறிப்பிட்டார்.

இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. பின்னர் சுதாரித்துக்கொண்ட அவர் தனது தவறைத் திருத்திகொண்டு சரியாக உச்சரித்தார். ஆனாலும்.,  காங்கிரஸ் மேடையில் தன் கட்சி தலைவி ஒருவரின் பெயரை கூட சரியாக சொல்லாமல் நடிகை ஒருவர் வாழ்க என்று நிர்வாகி முழங்கிய வீடியோ  சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதை பார்க்கும் நெட்டிசன்கள் பிரியங்கா சோப்ரா எப்போது காங்கிரஸில் சேர்ந்தார் என கிண்டலாக கேள்வி எழுப்பியுள்ளனர். இதனைத் தொடர்ந்து  சமூக வலைதளங்களில் நடிகை பிரியங்கா சோப்ரா ட்ரெண்ட் ஆகி வருகிறார்.

Tags : administrator ,Priyanka Gandhi ,Priyanka Chopra ,Congress , Is Priyanka Gandhi? Is Priyanka Chopra? Confused Congress administrator ... go viral on social networks
× RELATED கோர்ட்டில் ஆஜராகாததால் கைது...