×

வலங்கைமானில் நூற்றாண்டை கடந்து மழைநீர் ஒழுகும் கட்டிடத்தில் செயல்படும் காவல் நிலையம் இடம் மாற்றப்படுமா?

வலங்கைமான்: வலங்கைமான் தாலுகாவில் நூறாண்டை கடந்து மழைக்காலங்களில் ஒழுகும் நிலையில் உள்ள கட்டிடத்தில் செயல்படும் காவல் நிலையத்தை அதன் அருகில் உள்ள பயன்பாட்டில் இல்லாத பழைய தாசில்தார் அலுவலகத்திற்கு தற்காலிகமாக மாற்ற நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பேரூராட்சி பகுதியில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், வேளாண்மைதுறை அலுவலகம், புள்ளியியல் அலுவலகம், சட்டமன்ற அலுவலகம் மற்றும் காவல்நிலையம் ஆகியவை ஒரே பகுதியில் செயல்பட்டு வந்தன.

இதில் தாசில்தார் அலுவலகம் மற்றும் வேளாண்மை துறை அலுவலகம் ஆகியவை புதிய கட்டிடத்திற்கு கடந்த ஆண்டு இடம் பெயர்ந்தது. இதில் காவல் நிலையம் நீங்கலாக ஏனைய அலுவலகங்கள் சமீபகாலங்களில் கட்டப்பட்ட கட்டிடங்களில் செயல்பட்டு வருகிறது. கடந்த 1914ம் ஆண்டு கட்டப்பட்ட பழமையான கட்டிடத்தில் ஆயிரத்து 927 ம் ஆண்டு முதல் காவல் நிலையம் தற்போதுவரை ஒரே இடத்தில் செயல்பட்டு வருகிறது. 100 ஆண்டுகளை கடந்த இக்கட்டிடம் ஒருப்பகுதி மரம் மற்றும் ஓடுகளாலும் மற்றொறு பகுதி சுமார் 600 சதுரஅடி கான்கிரீட்டால் (மர ஒட்டு) அமைக்க பெற்றதாகும். ஓட்டினால் அமைக்கபட்ட பகுதி நல்ல நிலையிலும், கான்கிரீட்டால் அமைக்கப்பட்ட பகுதி பல இடங்களில் விரிசல் விட்டும் உள்ளது. தற்போது வலங்கைமான் பகுதியில் கனமழை பெய்துவரும் நிலையில் மழைநீர் கசிந்து பதிவேடுகள் சேதம் அடையும் நிலை உள்ளது. கட்டிடத்தின் கான்கிரீட் பகுதி 100 ஆண்டை கடந்ததால் வலுவிழந்ததை அடுத்து மழைநீர் உள்ளே புகுந்து கட்டிடத்தின் மேற்பரப்பு எடை பலமடங்கு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக காவல்நிலையத்தின் மேற்கூரை எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழக்கூடிய சூழ்நிலை உள்ளது.

முன்னதாக தாசில்தார் அலுவலகம் செயல்பட்டு வந்த காவல் நிலையம் அருகாமையில் உள்ள மற்றொரு பகுதி சற்று பாதுகாப்பாகவும், மழைநீர் ஒழுகாமலும் உள்ளதால் அப்பகுதியில் தற்காலிகமாக புதிய கட்டிடம் கட்டும் வரை செயல்பட மாவட்ட நிர்வாகம் உரிய முயற்சி மேற்கொள்ள வேண்டும். தற்போது காவல் நிலையம் செயல்படும் இடத்தை மாவட்ட கலெக்டர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்கள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். எனவே மேலும் தாமதம் செய்யமாமல் புதிய கட்டிடம் கட்டும்வரை காவல்நிலையத்தை அதன் அருகில் உள்ள பயன்பாட்டில் இல்லாத பழைய தாசில்தார் அலுவலகத்திற்கு தற்காலிகமாக மாற்ற நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : police station ,building , police station
× RELATED மதுராந்தகம் காவல் நிலையம் அருகே...