×

மழையால் புத்தகங்களை இழந்த அரசு பள்ளி மாணவர்களுக்கு புதிய புத்தகங்கள் வழங்கப்படும்: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்

ஈரோடு: மழையால் புத்தகங்களை இழந்த அரசு பள்ளி மாணவர்களுக்கு புதிய புத்தகங்கள் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுக்க கடந்த கடந்த வாரத்திலிருந்து பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் கடந்த 3 நாட்களாக விடமால் மழை பெய்துள்ளது. வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுவடைந்து வருவதால் தமிழகம் முழுக்க இன்னும் இரு நாட்களுக்கு மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், டெல்டா மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. தொடர் மழையால் பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டு வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது. அதுமட்டுமல்லாது, சில பகுதிகளில் வீடுகள் இடிந்து விழுந்து விபத்துகளும் நேர்ந்துள்ளன.

இந்நிலையில், ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே லக்கம்பட்டி பகுதியில் ஒரு கோடியே 24 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சாலை மேம்ப்பாட்டு பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது. இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோடட்டையன் கலந்துகொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், மழையினால் புத்தகங்களை இழந்துள்ள அரசு பள்ளி மாணவா்களுக்கு புதிய புத்தகங்கள் வழங்கப்படும். தொடர் மழை பெய்து வருவதால் விடுகள் இடிந்தும், வீட்டிற்குள் வெள்ளம் புகுந்தும் புத்தகங்களை மாணவர்கள் இழந்துள்ளனர். எனவே, மழையால் புத்தகங்களை இழந்துள்ள அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வழங்குவதற்காக தேவையான புத்தகங்கள் தயார் நிலையில் உள்ளது என கூறினார். மேலும், பாஜக மாநில துணைத் தலைவர் அரசகுமார் கூறிய கருத்து அவரது தனிப்பட்ட கருத்து, இன்னும் நூறாண்டு காலத்துக்கு அதிமுக ஆட்சி தொடரும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.


Tags : government school students ,Senkotayan New ,Senkottaiyan , Rain, Book, Government School, Students, School Department, Minister Sengottaiyan
× RELATED உயர் படிப்புக்கு நுழைவு ேதர்வு எழுத சிறப்பு பயிற்சி துவக்கம்