×

விமானத்தில் திடீர் இயந்திர கோளாறு: 224 பேர் தப்பினர்

சென்னை: சென்னை விமான நிலையத்தில் லங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டது. உடனடியாக இதை கவனித்து சரி செய்யப்பட்டதால் 224 பேர்  அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். சென்னையில் இருந்து கொழும்பு செல்ல வேண்டிய லங்கன் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட தயாரானது. இந்த விமானத்தில் பயணம் செய்ய இருந்த 217 பயணிகள் மற்றும் 7 விமான சிப்பந்திகள் உள்பட 224 பேர் விமானத்தில் அமர்ந்து விட்டனர். விமான ஓடுபாதையில் ஓடுவதற்கு தொடங்கும் முன் விமானி விமானத்தை சரி பார்த்தார்.

அப்போது விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டிருந்ததை விமானி கண்டு பிடித்தார். இந்நிலையில் விமானத்தை இயக்கினால் ஆபத்து ஏற்படும் என விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார்.  இதையடுத்து விமானத்தின் கதவு திறக்கப்பட்டு பயணிகள் இறக்கப்பட்டு விமான நிலைய ஓய்வறையில் தங்க வைக்கப்பட்டனர். பழுது சரிபார்க்கப்பட்டு, விமானம் இரவு 11 மணிக்கு மேல் புறப்பட்டு செல்லும் என அப்போது அறிவிக்கப்பட்டடது. உடனே விமானம் பழுது பார்க்கும் பணியும் நடந்தது.

ஆனால் நள்ளிரவு 12 மணி ஆகியும் விமானம் புறப்படவில்லை. பயணிகள் எப்போது விமானம் புறப்படும் என கேட்டு அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். விமானம் அதிகாலை 2 மணிக்கு புறப்பட்டு செல்லும் என அறிவித்தனர். ஆனால் அதிகாலை 3 மணி ஆகியும் புறப்படவில்லை. பயணிகள் விமான நிலையத்தில் ஆர்ப்பாட்டத்தில ஈடுபட்டனர். அதிகாரிகள்  பயணிகளை சமாதானப்படுதினர். இன்னும் ஒரு மணி நேரத்தில் விமானம் புறப்படும் என கூறினர்.
விமானம் நேற்று காலை 5 மணிக்கு பழுது பார்க்கப்பட்டு 8 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது. இதனால் 217 பயணிகள் இரவு முழுவதும் தூக்க மின்றி சென்னை விமான நிலையத்தில் தவித்த சம்பவம் நடந்தது. அதே நேரத்தில் விமானி தகுந்த நேரத்தில் இயந்திர கோளாறை கண்டு பிடித்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு 224 பேர் உயிர் தப்பினர்.


Tags : plane crash ,flight , On the flight, 224 people survived a sudden, mechanical failure
× RELATED கொல்கத்தா விமான நிலைய ஓடுபாதையில் 2...