×

மக்கும் குப்பையில் இருந்து உற்பத்தியாகும் இயற்கை உரத்தின் விற்பனையை அதிகரிக்க இலக்கு நிர்ணயம்: மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தகவல்

சென்னை: மக்கும் குப்பையில் இருந்து சென்னை மாநகராட்சி தயாரிக்கும்  இயற்கை உரத்தை 30 ஆயிரம் ஏக்கர் வரை விற்பதற்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்று மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்தார்.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் நாள்தோறும் சுமார் 4930 மெட்ரிக் டன் அளவிலான திடக்கழிவுகள் துப்புரவு பணியாளர்களால் சேகரிக்கப்படுகிறது. பின்னர் இவை மக்கும் மற்றும் மக்காத குப்பையாக பிரிக்கப்படுகிறது. இதில் மக்கும் குப்பையில் இருந்து இயற்கை முறையில் உரம் தயாரிக்கப்படுகிறது.

இந்த உரம் கிலோ ரூ.20க்கு விற்பனை செய்யப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவித்தார். இதன்படி பொதுமக்கள் 9445194802 என்ற செல்போனில் தொடர்பு கொண்டோ அல்லது வாட்ஸ்அப்பில் தெரிவித்தால், நேரடியாக வீடுகளுக்கு சென்னை மாநகராட்சி மூலம் கொண்டுவந்து வழங்கப்படும். அதற்கான பணம் டெலிவரியின் போது வீட்டிலேயே பெறப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் தற்போது வரை 9910 கிலோ இயற்கை உரம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூ.1.98 லட்சம் மாநகராட்சிக்கு வருமானம் கிடைத்துள்ளது.

பொதுமக்களின் இந்த ஆதரவைத் தொடர்ந்து சென்னையில் உள்ள முக்கிய இடங்களில் உர விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. இதன்படி பீனிக்ஸ் மார்கெட் சிட்டி, ஸ்கைவாக், சிட்டி சென்டர் உள்ளிட்ட வணிக வளாகங்கள், விஜிபி கோல்டன் பீச், பெசன்ட் நகர் கடற்கரை உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் 20 இடங்களில் விற்பனை இயற்கை உரம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியதாவது: நகர்புறங்களில் இயற்கை விவசாயத்தில் ஈடுபடுபவர்களுடன் இணைந்து மாநராட்சியின் இயற்கை உரத்தை விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு, வேளாண் உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் இயற்கை விவசாயம் செய்பவர்களுக்கு மாநகராட்சி சார்பில் தயாரிக்கப்பட்ட இயற்கை உரம் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டுவருகிறது. மேலும் தமிழக அரசின் ேதாட்டக்கலை மூலம் உரம் விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 30 ஆயிரம் ஏக்கர் நிலங்களுக்கு விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Prakash Prakash , Prakash, Corporation Commissioner, Information
× RELATED சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 87.13% மாணவ, மாணவியர் தேர்ச்சி: 56 பேர் 100/100