தே.காங்கிரசுக்கு 16 பதவிகள்

மும்பை: மகாராஷ்டிராவில், மகாராஷ்டிரா விகாஸ் அகாடி கூட்டணி அரசின் முதல்வராக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பதவியேற்றுள்ள போதிலும், இந்த கூட்டணியால் தேசியவாத காங்கிரஸ்தான் அதிக பலனடைந்துள்ளது. அதற்கு துணை முதல்வர் உட்பட 16 அமைச்சர் பதவிகளை ஒதுக்கீடு செய்ய கூட்டணியில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. சபாநாயகர் பதவி காங்கிரசுக்கு வழங்கப்பட்டு விட்டதால் அந்த கட்சிக்கு துணை முதல்வர் பதவி ஒதுக்கப்படாது. மாறாக அந்த கட்சிக்கு 12 அமைச்சர் பதவி தரப்பட உள்ளது. சிவசேனாவுக்கு முதல்வர் உட்பட 15 அமை ச்சர் பதவி கிடைக்கிறது.


Tags : T. Congress ,MUMBAI ,TNA Congress , MUMBAI, TNA Congress, 16 posts
× RELATED முதுகலை பட்டதாரி ஆசிரியர்...