×

பர்ன்ஸ், ரூட் அபார சதம் முன்னிலை பெறுமா இங்கிலாந்து?

ஹாமில்டன்: நியூசிலாந்து அணியுடனான 2வது டெஸ்டில், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட் இழப்புக்கு 269 ரன் எடுத்துள்ளது. செடான் பார்க் மைதானத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாசில் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீசியது. நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 375 ரன் குவித்து (129.1 ஓவர்) ஆல் அவுட்டானது. டாம் லாதம் 105, டெய்லர் 53, வாட்லிங் 55, டாரில் மிட்செல் 73 ரன் விளாசினர். இங்கிலாந்து பந்துவீச்சில் ஸ்டூவர்ட் பிராடு 4, வோக்ஸ் 3, சாம் கரன் 2, ஆர்ச்சர் 1 விக்கெட் வீழ்த்தினர்.

அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து, 2ம் நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 39 ரன் எடுத்திருந்தது. ரோரி பர்ன்ஸ் 24, ஜோ ரூட் 6 ரன்னுடன் நேற்று ஆட்டத்தை தொடர்ந்தனர். அபாரமாக விளையாடிய இந்த ஜோடி 3வது விக்கெட்டுக்கு 177 ரன் சேர்த்தது. பர்ன்ஸ் 101 ரன் (209 பந்து, 15 பவுண்டரி) விளாசி ரன் அவுட்டானார். அடுத்து வந்த பென் ஸ்டோக்ஸ் 26, ஜாக் கிராவ்லி 1 ரன்னில் பெவிலியன் திரும்பினர். மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 5 விக்கெட் இழப்புக்கு 269 ரன் எடுத்துள்ளது. கேப்டன் ஜோ ரூட் 114 ரன் (278 பந்து, 14 பவுண்டரி), ஓலி போப் 4 ரன்னுடன் களத்தில் உள்ளனர். கை வசம் 5 விக்கெட் இருக்க, இங்கிலாந்து அணி இன்னும் 106 ரன் பின்தங்கியுள்ள நிலையில் இன்று 4ம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது.

Tags : Burns ,Root ,England , Burns, Root, Absolute Century, England?
× RELATED பட்லர் தலைமையில் பலமான இங்கிலாந்து