×

லாரா சாதனையை ரோகித் முறியடிக்கலாம்...: வார்னர் கணிப்பு

அடிலெய்டு: டெஸ்ட் போட்டியின் ஒரு இன்னிங்சில் அதிகபட்சமாக 400 ரன் விளாசிய வெஸ்ட் இண்டீஸ் வீரர் பிரையன் லாராவின் சாதனையை முறியடிக்க, இந்திய அணி தொடக்க வீரர் ரோகித் ஷர்மாவுக்கு அதிக வாய்ப்பு உள்ளதாக டேவிட் வார்னர் கூறியுள்ளார். பாகிஸ்தான் அணிக்கு எதிராக அடிலெய்டில் நடந்து வரும் பகல்/இரவு டெஸ்ட் போட்டியில், ஆஸி. அணி தொடக்க வீரர் வார்னர் ஆட்டமிழக்காமல் 335 ரன் விளாசினார். அவர் தொடர்ந்து அதிரடியாக விளையாடி லாராவின் 400 ரன் சாதனையை தகர்ப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆஸி. அணி கேப்டன் டிம் பெய்ன் டிக்ளேர் செய்து அதிர்ச்சி அளித்தார்.

அவரது இந்த முடிவால் வார்னரின் சாதனை வாய்ப்பு கை நழுவியது. சமூக வலைத்தளங்களில் டி பெய்னை ரசிகர்கள்கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், இது குறித்து வார்னர் கூறியதாவது: லாராவின் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பு யாருக்கு உள்ளது என்று கேட்டால், நிச்சயமாக அது இந்திய அணி தொடக்க வீரர் ரோகித் ஷர்மாவுக்கு தான் என்பேன். தொடக்க வீரரான அவர் அதிரடியாக விளையாடக் கூடியவர் என்பதால் 400 ரன்னை விரைவாக எட்டி விடலாம் என நினைக்கிறேன்.  ஐபிஎல் தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக விளையாடியபோது வீரேந்திர சேவக் அளித்த டிப்ஸ் மிகவும் உதவிகரமாக உள்ளன. உங்களால் டி20 போட்டியை விட டெஸ்ட் போட்டியில் இன்னும் சிறப்பாக விளையாட முடியும் என்றார். அவரது வார்த்தைகள் மிகுந்த நம்பிக்கை அளித்தன. இவ்வாறு வார்னர் கூறியுள்ளார்.

Tags : Lara ,Rohit ,Warner , Laura Adventure, Rohit, Breaking Down, Warner Prediction
× RELATED நவம்பரில் என்னை அழைத்ததற்கு நன்றி ரோஹித் : ராகுல் டிராவிட்