×

வளர்ச்சி திட்டங்கள் மூலம் பேரிடர் காலங்களில் தமிழகத்தை பாதுகாப்பதே அரசின் நோக்கம்: ஜம்மு கருத்தரங்கில் அமைச்சர் பேச்சு

சென்னை: வளர்ச்சி திட்டங்கள் வாயிலாக பேரிடர் காலங்களில் தமிழகத்தை அமைப்பு ரீதியாக  பாதுகாப்பதே அரசின் தொலைநோக்கு திட்டம் என்று அமைச்சர் உதயகுமார் ஜம்முவில் நடந்த கருத்தரங்கில் பேசினார். ஒரே இந்தியா சிறப்பான இந்தியா திட்டத்தின் கீழ் தமிழ்நாடு, ஜம்மு, காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரேதசங்கள் கூட்டாக சேர்ந்து நீர் ஆற்றல், நீர் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆகிய துறைகளில் தத்தம் அனுபவங்கள் மற்றும் இணைந்து பணியாற்றுவது குறித்த கருத்தரங்கம் ஜம்முவில் நேற்று நடைபெற்றது. தமிழகம் சார்பில், நீர் ஆற்றல் மற்றும் பேரிடர் மேலாண்மை என்ற தலைப்பில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை மற்றும் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு பேசியதாவது:தமிழகத்தில் கடந்த காலங்களில் வடகிழக்கு பருவ மழையின்போது கஜா (2018), ஒக்கி (2017), வர்தா (2016), நீலம் (2012), தானே (2011), ஜல் (2010) மற்றும் நிஷா (2008) ஆகிய புயல்களால் தமிழ்நாடு பாதிக்கப்பட்டுள்ளது. இவை ஒவ்வொன்றும் புதிய பாடங்களை நமக்கு கற்பித்துள்ளன.

பேரிடர் மேலாண்மையில் ஆயத்த நிலை என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். பேரிடர் கால அபாயங்கள் மற்றம் மனித உயிரிழப்புகள் ஆகியவை சிறந்த ஆயத்தநிலை மூலமாக தவிர்க்கலாம் அல்லது குறைக்கலாம். ஆயத்த நிலையானது பேரிடர் தணிப்பு ஏற்பாடுகளை மேலும் வலுவுள்ளதாக்குகிறது. தகவல் பரிமாற்றம் தங்கு தடையில்லாமல் செல்வதற்கு வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது. தேடுதல் மற்றும் மீட்பு பணிகளுக்கு சேட்டிலைட் போன்கள் மற்றும் நவீன உபகரணங்கள் வாங்கப்பட்டுள்ளது.தமிழக அரசின் நீண்ட கால தொலைநோக்கு இலக்கு, தமிழகத்தை ஒரு பாதுகாப்பான மாநிலமாகவும், பேரிடர் காலங்களில் பாதிக்கப்படாத வகையில் அமைப்பு ரீதியான மற்றும் பேரிடர் மேலாண்மை சார்ந்த வளர்ச்சி திட்டங்கள் ஆகியவை வாயிலாக பாதுகாப்பதே அரசின் திட்டம் ஆகும். இவ்வாறு அவர் பேசினார்.


Tags : Govt ,Tamil Nadu ,disaster , Govt's aim ,protect Tamil Nadu, catastrophic times, Govt.
× RELATED தேனியில் சுட்டெரிக்கும் வெயிலால்...