×

லாரி மோதி இன்ஜினியர் உயிரிழப்பு பெற்றோருக்கு ரூ.1.10 கோடி இழப்பீடு: நீதிமன்றம் உத்தரவு

சென்னை: டேங்கர் லாரி மோதி உயிரிழந்த இன்ஜினியரின் பெற்றோருக்கு ₹1.10 கோடி இழப்பீடு வழங்க மோட்டர் வாகன விபத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னையை சேர்ந்தவர் ராகேஷ்(23). இன்ஜினியரிங் முடித்த இவர், தனியார் நிறுவனத்தில் டெக்னிசியனாக வேலை செய்து வந்தார். இந்தநிலையில் கடந்த 2012ம் ஆண்டு மதியம் 12.30 மணியளவில் பைக்கில் சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த வழியே டேங்கர் லாரி ஒன்று வேகமாக வந்துள்ளது. அந்த லாரி திடீரென கட்டுபாட்டை இழந்து ராகேஷ் மீது மோதியது. அதில் அவர் இடுப்பு மீது லாரி ஏரி பலத்த காயமடைந்தார். இதனையடுத்து மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் உயிரிழந்தார். பின்னர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்தநிலையில், வாலிபரின் பெற்றோர் பத்மகுமார், யசோதா தேவி ஆகியோர், தனது மகனின் இறப்புக்கு இழப்பீடு கோரி மோட்டர் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் தீர்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கு நீதிபதி உமாமகேஷ்வரி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் போலீஸ் விசாரணை, பிரேத பரிசோதனை, சான்றிதழ்கள், சாட்சிகளை வைத்து பார்கும்போது, லாரி மோதி ராகேஷ் உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது. 23 வயதில் இறந்துள்ளார். மாதம் ₹75 ஆயிரம் சம்பளம் வாங்கி வந்தது, விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே அவரது மாதம் சம்பளம், வயது அனைத்தையும் கருத்தில் கொண்டு குடும்பத்தினருக்கு ₹1 கோடி 10 லட்சத்து 35 ஆயிரம் இழப்பீடாக வழங்க உத்தரவிட்டார்.

Tags : parents ,lorry collision engineer ,Death ,Larry Moti Engineer , 1.10 Crore, Compensation, Parents of Larry Moti Engineer Death,Court Order
× RELATED பாட்னா ரயில் நிலையம் அருகே ஓட்டலில்...