டாக்டர் பிரியங்கா பலாத்காரம் செய்து எரித்து கொலை: குற்றவாளிகளை நடுவீதியில் தூக்கிலிடவேண்டும்...நடிகர் சிரஞ்சீவி-கீர்த்தி சுரேஷ் ஆவேசம்

ஐதராபாத்: டாக்டர் பிரியங்காவை பலாத்காரம் செய்து எரித்து கொன்ற குற்றவாளிகளை நடுவீதியில் மக்கள் முன்னிலையில் தூக்கிலிட வேண்டும் என்று நடிகர் சிரஞ்சீவி கூறி உள்ளார். ஐதராபாத்தில் சில தினங்களுக்கு முன் பெண் மருத்துவர்  பிரியங்கா ரெட்டி என்பவரை சிலர் கடத்தி சென்று எரித்துக்கொலை செய்தனர். அவர் பாலியல் பலாத் காரம் செய்யப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகம் எழுந்துள்ளது. இந்த சம்பவம்  இந்தியா முழுவதும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளதுடன் நாடு  முழுவதும் எதிர்ப்பு எழுந்துள்ளது. திரைப்பட நடிகர், நடிகைகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து நடிகர் சிரஞ்சீவி கூறும்போது,’ஒரு சகோதரனாக, இரண்டு மகள்களுக்கு தந்தையாக இந்த சம்பவம் என் மனதை பெரிதும் பாதித்திருக்கிறது. குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். ஈவு இரக்கம்  காட்டாமல் அவர்களை நடுவீதியில் மக்களின் கண் எதிரிேலயே தூக்கிலிட தயங்கக்கூடாது’ என தெரிவித்திருக் கிறார்.

நடிகை  கீர்த்தி சுரேஷ் டிவிட்டர் பக்கத்தில் கூறும்போது, ‘பிரியங்கா பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டது அறிந்து இதயம் நொறுங்கி விட்டது. நாளுக்கு நாள் பயம் அதிகரிக்கிறது. யார் மீது குற்றம் சொல்லுவது என்று தெரியாமல்  வார்த்தை களற்று இருக்கிறேன். ஐதராபாத் போன்ற நகரங்களை நான் மிகவும் பாதுகாப்பானது என்று கருதியிருந்தேன். எப்பொழுது நம் நாடு பெண்கள் எந்த நேரம் வேண்டு மானாலும் வெளியில் வரலாம் என்ற அளவிற்கு பாதுகாப்பாக மாறும்.  இதுபோன்ற குற்ற செயல்களில் ஈடுபடும் கொடூர சைக்கோக்களை அந்த இடத்திலேயே சுட்டு வீழ்த்த வேண்டும். பிரியங்காவின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்கள் இதிலிருந்து குடும்பத்தார் மீண்டு வர இறைவன் அவர்களுக்கு தைரியத்தை  தரவேண்டும். நான் கர்மாவை நம்புகிறேன். அது கண்டிப்பாக அவர்களுக்கு தண்டனை தரும்’ என தெரிவித்திருக்கிறார்.

Related Stories: