×

டிசம்பர் 7-ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தல்: நாளை தேர்தல் அட்டவணை வெளியீடா?...பொதுமக்கள் எதிர்பார்ப்பு

சென்னை: தமிழகத்தில் கடந்த 2016ல் ஜெயலலிதா முதல்வராக இருந்த போது, உள்ளாட்சி  தேர்தல் அறிவிக்கப்பட்டது. நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கால், தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது. அதன்பிறகு 3 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல்  நடைபெறாமல் உள்ளது. உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.

இவர்களின் பதவி காலம் இதுவரை 6 முறை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான பணிகளை, மாநில தேர்தல் ஆணையம் செய்து  வருகிறது. வாக்காளர் பட்டியல் தயார் செய்வது மற்றும் வாக்குச்சாவடிகள் அமைப்பது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டது. மேலும் மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றும்  அதிகாரிகளை இடமாற்றம் செய்ய வேண்டும் என்றும் மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதன்படி உள்ளாட்சி தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் 92,771 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. வாக்காளர் பட்டியலும் வெளியிடப்பட்டது.

மேலும் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களின் செலவு கணக்கை தாக்கல்   செய்வது, கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்வது தொடர்பாகவும் அறிவிப்புகள் வெளியிடப்பட்டது.

இதற்கிடையே, உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் கடந்த 18ம் தேதி விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையின் போது உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான பணிகள் அனைத்தையும் முடித்து டிசம்பர் 13ம் தேதிக்குள்  உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அப்போது நடந்த விசாரணையில் டிசம்பர் 2ம் தேதி (நாளை ) உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம்  கூறியது.

இந்த நிலையில், திமுக சார்பில் கடந்த 28-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் ஒரு புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பாணையை வெளியிடுவதற்கு முன்பு, தொகுதி மறுவரையறை   பணியை முழுமையாக முடிக்க வேண்டும். இதில் தேர்தல் சட்ட விதிகள் அனைத்தும் பின்பற்றப்பட வேண்டும். இது குறித்து தமிழக அரசு மற்றும் மாநில தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்,’ என கோரிக்கை   விடப்பட்டிருநத்து. தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பான அனைத்து வழக்குகளையும் பட்டியலிட்டு விரைவில் நீதிமன்றம் விசாரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மேற்கண்ட வழக்குகள் அனைத்தும் நாளை  மறுநாள் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், டிசம்பர் 7-ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தல் அட்டவணை வெளியிடப்படும் என நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், உள்ளாட்சி தேர்தல் கால அட்டவணைக்கான அறிவிப்பு நாளை  வெளியாக உள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. 13-ம் தேதி வழக்கு விசாரணையை பார்த்து விட்டு, அதன்பிறகு தேதி அறிவிப்பு குறித்து முடிவெடுக்கலாம் என தேர்தல் ஆணையம் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

Tags : elections ,release ,Politicians , Local elections by December 7: Will the release of tomorrow's election schedule? ... Politicians expect
× RELATED மக்களவை தேர்தல்: திரிபுராவில் 54.47% வாக்குப்பதிவு