×

வெங்காய விலை எதிரொலி: துருக்கி,எகிப்தில் இருந்து 17,090 மெட்ரிக்டன் இறக்குமதி செய்தது மத்திய அரசு

டெல்லி: துருக்கியிலிருந்து 11 ஆயிரம் மெட்ரிக் டன் வெங்காயத்தை இந்தியா இறக்குமதி செய்தது. பெரிய வெங்காயம் உற்பத்தி மாநிலங்களான மகாராஷ்டிரா, கர்நாடகா உட்பட பல்வேறு மாநிலங்களில் பெய்த தொடர் மழையால் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதோடு, இருப்பு வெங்காயம் அழுகியதால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.  திருப்பூர். கோவை, ஈரோடு, கரூர், திருச்சி, சென்னை உட்பட பல்வேறு தொழில் நகரங்களிலிருந்து பல்வேறு நாடுகளுக்கு ஆடைகள், இயந்தரங்கள், இறைச்சி வகைகள், இரும்பு தளவாடப்பொருட்கள், மின்சாதனப்பொருட்கள் உட்பட பல்வேறு பொருட்கள் மும்பை துறைமுகம் வழியாக ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இதற்காக ஆயிரக்கணக்கான பார்சல் லாரிகள் இயங்கி வருகிறது.  தமிழகத்திற்கு திரும்பி வரும் வழியில் உள்ள மும்பை, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் உள்ள மொத்த வெங்காய சந்தைகளிலிருந்து பெரிய வெங்காய மூட்டை ஏற்றி தமிழகத்திலுள்ள பல்வேறு மாவட்டங்களில் உள்ள சந்தைகளில்  விற்பனை செய்யப்படுவது வழக்கம். கடந்த சில மாதங்களாக மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா உட்பட பல்வேறு மாநிலங்களில் தொடர் மழையால் அறுவடை முற்றிலும் தடைபட்டுள்ளது. மேலும், இருப்பு வைத்துள்ள வெங்காய மூட்டைகள் மழையில் நனைந்து அழுகியுள்ளது. தொடர் மழையால் தமிழகத்தில் இருந்து சரக்கு வாகனங்கள் வடமாநிலங்களுக்கு அதிகளவு செல்லாததால்  பெரிய வெங்காய மூட்டைகளை ஏற்றிவருவது தடைபட்டுள்ளது. பருவ மழை காலத்தில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பெரும்பாலான வெங்காய பயிர்கள் அழுகி அழிந்து விட்டன.

இதனால் இந்த மாநிலங்களில் 26 சதவீத வெங்காய உற்பத்தி சரிவு ஏற்பட்டுள்ளது. எனவேதான் நாடு முழுவதும் வெங்காய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தட்டுப்பாட்டை போக்க 1 லட்சத்து 20 ஆயிரம் டன் வெங்காயத்தை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதற்கு மத்திய அமைச்சரவை அனுமதி அளித்து இருந்தது. இதன் அடிப்படையில் முதற்கட்டமாக 11 ஆயிரம் மெட்ரிக் டன் வெங்காயத்தை இந்தியா இறக்குமதி செய்தது. இந்த வெங்காயம் கப்பலில் இந்தியா வர உள்ளது. துருக்கியில் இருந்து 11,000 மெட்ரிக்டன் வெங்காயம் இம்மாத இறுதி அல்லது ஜனவரி தொடக்கத்தில் மும்பை துறைமுகத்தை அந்த கப்பல் வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. எகிப்திலிருந்து 6,090 மெட்ரிக்டன் வெங்காயம் இம்மாத மத்தியில் இறக்குமதி செய்யப்பட்டது.

இவ்வாறு கொண்டு வரப்படும் வெங்காயம் மும்பை மாநில அரசுக்கு ரூ.52-ல் இருந்து ரூ. 55 வரை விலை வைத்து வழங்கப்படும். டெல்லிக்கு ரூ.60 என்ற விலையில் சப்ளை செய்யப்படும் என கூறப்படுகிறது.


Tags : government ,Egypt ,Turkey ,India , Onion Price, Turkey, Egypt, Import, India
× RELATED ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கம்பி...