தாய் சாப்பாடு ஊட்டியபோது 2வது மாடியில் இருந்து தவறி விழுந்த குழந்தை படுகாயம்: வண்ணாரப்பேட்டையில் பரபரப்பு

தண்டையார்பேட்டை: பழைய வண்ணாரப்பேட்டை நாராயணப்ப தோட்டம்  7வது தெருவை சேர்ந்தவர் சையத் அபுதாகீர். இவரது ஒன்றரை வயது மகன் இர்பானுக்கு நேற்று மதியம் வீட்டின் 2வது மாடியில் சாப்பாடு ஊட்டிக் கொண்டு இருந்தனர். அப்போது, எதிர்பாராத விதமாக தாயின் கையில் இருந்து குழந்தை தவறி கீழே விழுந்தது. படுகாயமடைந்த குழந்தையை மீட்டு உடனடியாக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வண்ணாரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மாடியில் இருந்து குழந்தைகள் தவறி விழும் சம்பவங்கள் வடசென்னையில் அடிக்கடி நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு கொடுங்கையூரில் வீட்டின் மாடியில் வைத்து சாப்பாடு ஊட்டியபோது, ஒரு குழந்தை தவறி விழுந்தது. கடந்த 4 மாதங்களுக்கு முன் சவுகார்பேட்டை பகுதியில் வீட்டின் மாடியில் வைத்து சாப்பாடு ஊட்டும்போது ஒரு குழந்தை தவறி விழுந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>