சென்னை கிழக்கு மாவட்ட அமமுகவினர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், சென்னை கிழக்கு மாவட்ட அமமுக மாவட்ட அவை தலைவர் சுகுமார் தலைமையில், தலைமை செயற்குழு உறுப்பினரும் முன்னாள் கவுன்சிலருமான ஹேமமாலினி, பகுதி துணை செயலாளர் ராமு, வட்ட செயலாளர் புரசை தேவராஜ், அண்ணா தொழிற்சங்க மாவட்ட இணை செயலாளர் சங்கர், மாவட்ட மாணவர் அணி இணை செயலாளர் கார்த்திக், மாவட்ட அம்மா பேரவை துணை தலைவர் நாகராஜ், மாவட்ட இளைஞர் அணி துணை தலைவர் பாஸ்கர், எம்.ஜி.ஆர்.மன்ற மாவட்ட இணை செயலாளர் வெங்கடேசன், அண்ணா தொழிற்சங்க பகுதி செயலாளர் பாபு, பகுதி பேரவை இணை செயலாளர் டில்லிபாபு, பகுதி சிறுபான்மை பிரிவு துணை தலைவர் சுரேஷ், பகுதி இளைஞர் அணி இணை செயலாளர் நிலேஷ்குமார், வட்ட தலைவர் தங்கவேலன்,

வட்ட இணை செயலாளர் சீனிவாசன், வட்ட துணை செயலாளர் லட்சுமணன், வட்ட பொருளாளர் ரயில் தேவராஜ், வட்ட (75 மே) இணை செயலாளர் செந்தில்மேஸ்திரி, வட்ட (75 கி) இணை செயலாளர் பாஸ்கர், வட்ட (75 கி) இளைஞர் அணி செயலாளர் வேல்முருகன் உள்ளிட்ட 80க்கும் மேற்பட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் திமுகவில் இணைந்தனர். நிகழ்ச்சியில், சென்னை கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் பி.கே.சேகர்பாபு எம்எல்ஏ, மாநில இளைஞர் அணி துணை செயலாளர் ப.தாயகம்கவி எம்எல்ஏ, திருவிகநகர் தெற்கு பகுதிச் செயலாளர் சாமிக்கண்ணு, மாவட்ட பொருளாளர் ஆஸாத், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் லோகேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories:

>