அல்கொய்தா தீவிரவாத அமைப்புடன் தொடர்பா? திருச்சி, தஞ்சையில் 2 வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை: 3 பேரிடம் தீவிர விசாரணை

திருச்சி: திருச்சி, தஞ்சையில் 2 பேரது வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் ஒரு வீட்டில் லேப்டாப், செல்போன், டைரி பறிமுதல்  செய்யப்பட்டது. மேலும், அல்கொய்தா அமைப்புடன் தொடர்பு உள்ளதா என 3 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இலங்கையில் கடந்தாண்டு ஈஸ்டர் பண்டிகையின்போது தேவாலயங்களில் நடந்த குண்டுவெடிப்பில் 250க்கும் மேற்பட்டோர் இறந்தனர். இதில் ஈடுபட்ட தீவிரவாத அமைப்புக்கும், தமிழகத்தில் உள்ள சிலருக்கும் தொடர்பு இருப்பதாக தேசிய புலனாய்வு பிரிவுக்கு (என்ஐஏ) தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் கோவை, நாகை, திருச்சி, மதுரை, நெல்லை ஆகிய இடங்களில் சோதனை நடத்தி உள்ளனர்.

இந்தநிலையில் நேற்று திருச்சி, தஞ்சையில் 2 வீடுகளில் சோதனை நடத்தினர். திருச்சி எடமலைப்பட்டிபுதூர் சீனிவாசா நகர் விஸ்தரிப்பு பகுதியை சேர்ந்தவர் அப்துல் சமது மகன் சர்புதீன் (23). நேற்று காலை 7 மணியளவில் என்ஐஏ  அதிகாரிகள் இவரது வீட்டுக்கு வந்தனர். வீட்டில் அப்துல்சமது,  சர்புதீன், உறவினர் ஜாபர் மற்றும் குடும்பத்தினர் இருந்தனர். அவர்களிடம் விசாரணை  நடத்தினர். சோதனை 10.30 மணிக்கு முடிந்தது. பின்னர் சர்புதீன், ஜாபர் ஆகியோரை விசாரணைக்காக அழைத்து சென்றனர். இதுபற்றி என்ஐஏ அதிகாரிகளிடம் கேட்டபோது, முஸ்லிம் அமைப்பினரின் சமூகவலைதளங்களை கண்காணிப்பதற்காக எஸ்ஐயு என்ற பிரிவு உள்ளது.

இந்த பிரிவு சர்புதீனின் வாட்ஸ்அப் தொடர்புகளை கண்காணி–்த்தபோது, அவர் அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தினருடன் தகவல் பரிமாற்றம் செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. மேலும்   சர்புதீன் நாளை (இன்று) வெளிநாட்டுக்கு செல்ல இருந்தார். எனவே அல்கொய்தா அமைப்பினருக்கு ஏதேனும் தகவல் அல்லது பொருட்கள் எதுவும் கொண்டு செல்கிறாரா? என்று விசாரணை நடந்து வருகிறது என்றனர். அதேபோல் தஞ்சை கீழவாசல் ஆட்டுமந்தை  தெருவை சேர்ந்தவர் அலாவுதீன்(37).

இவர் வீட்டில் காலை 6 மணி முதல் 10.30 மணி வரை சோதனை நடந்தது. பின்னர், வீட்டில் இருந்து லேப்டாப், செல்போன், ஒரு டைரி  ஆகியவற்றை பறிமுதல் செய்து, சேக்  அலாவுதீனை கிழக்கு காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

Tags : Al Qaeda ,extremist organization ,homes ,NIA ,Trial ,Tanjore ,Trichy ,Trichy Al Qaeda Terrorist Organization , Al Qaeda Terrorist Organization, Trichy, Tanjore, NIA, Trial
× RELATED குமரி மற்றும் நெல்லை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மிதமான மழை