இலங்கை தமிழர் வாழ்வுரிமை பாதுகாக்க வேண்டும் : மோடிக்கு கே.எஸ்.அழகிரி கோரிக்கை

சென்னை: இலங்கை தமிழர் களின் வாழ்வுரிமையை பாதுகாப்புக்கு தேவையான நடவடிக்கை பிரதமர் மோடி எடுக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற கோத்தபய ராஜபக்சே அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ளார். குடியரசுத் தலைவர், பிரதமர் ஆகியோரை சந்தித்து பேசியிருக்கிறார். இலங்கையில் உள்ள பெரும்பான்மை சிங்கள மக்களின் வாக்குகளைப் பெற்று கோத்தபய ராஜபக்சே வெற்றி பெற்றுள்ளதால் இலங்கையில் வாழ்கிற சிறுபான்மை தமிழர்கள் மற்றும் இஸ்லாமியர்களிடையே பதற்றமான சூழல் உருவாகியிருக்கிறது.

இலங்கைத் தமிழர்களின் 40 ஆண்டுகால பிரச்சினையை தீர்க்க, இனக் கொடுமைக்கு முடிவு காண ஜூலை 1987ல் இந்தியா - இலங்கை உடன்பாட்டை அன்றைய பிரதமர் ராஜீவ்காந்தியும், இலங்கை அதிபர் ஜெயவர்த்தனாவும் உருவாக்கினார்கள். இலங்கையில் வாழ்கிற தமிழர்களுக்கு பாதுகாப்பு கவசமாக இன்றைக்கும் விளங்குவது 13வது திருத்தம் தான். ஆனால், இலங்கை அரசுகள் தொடர்ந்து இந்த ஒப்பந்தத்தின் முழு பலனை தமிழர்கள் பெற விடாமல் தடுத்து வருகின்றன. இத்தகைய உரிமைகளை இலங்கை அரசிடமிருந்து பெற்றுத் தருகிற மிகப்பெரிய பொறுப்பு இந்திய அரசுக்கு இருக்கிறது. குறிப்பாக, பிரதமர் மோடி தமிழர்களின் வாழ்வுரிமையைக் காப்பாற்றுகிற வகையில் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். எனவே பிரதமர் மோடி, இலங்கை அரசுடன் உறுதியான பேச்சுவார்த்தைகளை நடத்த வேண்டும்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Tags : KS Alagiri ,Modi , KS Alagiri demands, Modi's life
× RELATED மக்களுக்கு தேவையற்றதையே மோடி அரசாங்கம் செய்கிறது: கே.எஸ்.அழகிரி கருத்து