×

வருகிற 5ம் தேதி ஜெயலலிதாவின் 3ம் ஆண்டு நினைவு நாள்: இபிஎஸ், ஓபிஎஸ் தலைமையில் அஞ்சலி

சென்னை: ஜெயலலிதாவின் 3ம் ஆண்டு நினைவு நாளையொட்டி வருகிற 5ம் தேதி அவரது சமாதியில் இபிஎஸ், ஓபிஎஸ் தலைமையில் அஞ்சலி செலுத்தப்படுகிறது. இதுகுறித்து அதிமுக தலைமை கழகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: ஜெயலலிதாவின் 3ம் ஆண்டு நினைவு நாளான வருகிற 5ம் தேதி (வியாழன்) காலை 10 மணியளவில், சென்னை, அண்ணா சாலையில் அமைந்துள்ள அண்ணா சிலையில் இருந்து அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் ஊர்வலமாக புறப்பட்டு, ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று மலர் அஞ்சலி செலுத்த உள்ளார்கள். அதனைத் தொடர்ந்து, நினைவிட வளாகத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

நிகழ்ச்சிகளில் தலைமை நிர்வாகிகள், அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், முன்னாள் எம்பி, எம்எல்ஏக்கள், எம்.ஜி.ஆர். மன்றம், ஜெயலலிதா பேரவை, இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நல பிரிவு உட்பட அதிமுகவின் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்துகொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Jayalalithaa ,3rd Anniversary Commemoration , Jayalalithaa
× RELATED ஜெயலலிதாவுக்கு சொந்தமான நகைகளை...