நிரஞ்சன் மார்டி ஓய்வு பெற்றார் தமிழக அரசின் புதிய உள்துறை செயலாளராக எஸ்.கே.பிரபாகர் நியமனம்

சென்னை: தமிழக அரசின் உள்துறை செயலாளராக இருந்த நிரஞ்சன் மார்டி ஓய்வு பெற்றதை தொடர்ந்து, புதிய உள்துறை செயலாளராக நெடுஞ்சாலை துறை முதன்மை செயலாளராக இருந்த எஸ்.கே.பிரபாகர் நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து, தமிழக அரசின் தலைமை செயலாளர் சண்முகம் நேற்று வெளியிட்டுள்ள உத்தரவில் கூறி இருப்பதாவது: தமிழக உள்துறை செயலாளராக பதவி வகித்து வந்த நிரஞ்சன் மார்டி, நேற்று ஓய்வு பெற்றார். இதையடுத்து தமிழக அரசின் புதிய உள்துறை செயலாளராக எஸ்.கே.பிரபாகர் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அரசாணையை தமிழக அரசு நேற்று முன்தினம் பிறப்பித்துள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. புதிதாக நியமிக்கப்பட்டுள்ள உள்துறை செயலாளர் எஸ்.கே.பிரபாகர், 1989ம் ஆண்டு ஐஏஎஸ் ஆக தேர்வு பெற்றார். தற்போது நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறையின் முதன்மை செயலாளராக பதவி வகித்து வருகிறார்.

Tags : Niranjan Marty ,SK Prabhakar , Appointment
× RELATED நிரஞ்சன் மார்டி இந்த மாதம் ஓய்வு புதிய...