பொருளாதார வளர்ச்சி 3வது காலாண்டில் மேலும் மோசமாகும்: ப.சிதம்பரம் எச்சரிக்கை

புதுடெல்லி: ‘‘நாட்டின் பொருளாதார வளர்ச்சி மூன்றாவது காலாண்டில் 4.5 சதவீதத்தை தாண்டாது. இன்னும் மோசமாக வாய்ப்புள்ளது,’ என டிவிட்டரில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். நாட்டின் பொருளாதார வளர்ச்சி கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிவை  சந்தித்துள்ளது. கடந்த ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான 2வது காலாண்டில்  மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 4.5 சதவீதமாக குறைந்துள்ளது. இந்நிலையில், ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய நிதியமைச்சரும்,

காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம், ஜிபிடி குறைந்தது பற்றி தனது குடும்பத்தினர் மூலமாக டிவிட்டரில் கருத்து வெளியிட்டுள்ளார். அதில் அவர், ‘ஏற்கனவே கணித்தபடி 2வது காலாண்டில் ஜிடிபி 4.5 சதவீதமாக குறைந்துள்ளது. ஆனாலும், எல்லாம் நல்ல நிலையில் உள்ளதாக அரசு கூறுகிறது. 3வது காலாண்டில் ஜிடிபி 4.5 சதவீதத்தை விட அதிகமாக இருக்காது. மேலும் குறையவே வாய்ப்புள்ளது. ஜார்கண்ட் மக்கள் சட்டப்பேரவை தேர்தலில் பாஜ அரசுக்கு எதிராக வாக்களித்து, பாஜ.வின் கொள்கைகளையும், நிர்வாகத்தையும் நிராகரிக்க வேண்டும்,’ என கூறியுள்ளார்.

Related Stories:

>