×

தமிழகத்தில் உடல் உறுப்பு தானம் மக்கள் இயக்கமாக மாற்றப்படும்: விஜயபாஸ்கர் பேட்டி

சென்னை: டெல்லியில் 10வது இந்திய உடல் உறுப்பு தான நிகழ்ச்சி மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமர்ச்சர் ஹர்ஷவர்தன் தலைமையில் நேற்று நடந்தது. இதில் அனைத்து மாநில சுகாரதாரத்துறை அமைச்சர்களும் கலந்து கொண்டனர். தமிழகத்தின் சார்பில் மாநில அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டார். இதையடுத்து அவரிடம் உடல் உறுப்பு தானத்தில் சிறந்த மாநிலமாக தமிழகத்துக்கு விருது வழங்கப்பட்டது.

இந்த மாநாட்டிற்கு பிறகு விஜயபாஸ்கர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: மத்திய சுகாதாரத்துறையின் இந்த விழாவில் தமிழகத்திற்கு மூன்று விருதுகள் வழங்கப்பட்டது. அதில் முதலாவதாக, உடல் உறுப்பு தானத்தில் சிறந்த மாநிலமாக அறிவிக்கப்பட்டு விருது வழங்கப்பட்டது. இது தமிழகத்துக்கு தொடர்ந்து 5வது முறையாக வழங்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து உடல் உறுப்புதான சிகிச்சை அளிப்பதில் சிறந்ததாக ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கும், இதேப்போல் இரண்டு கைகளையும் இழந்த ஒருவருக்கு இந்திய அளவில் சிறந்த சிகிச்சை வழங்கியதற்கான விருதும் வழங்கப்பட்டுள்ளது.விரைவில் உடல் உறுப்பு தானம் மக்கள் இயக்கமாக தமிழகத்தில் மாற்றப்படும். தமிழகத்தில் இதுவரை 1,325 பேர் மூலமாக 7 ஆயிரத்து 779 உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Tamil Nadu ,Vijaya Bhaskar , Vijaya Bhaskar
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...