×

சென்னையில் இருந்து ரயில் மூலம் நேபாளத்துக்கு 16 நாட்கள் சுற்றுலா : ஸ்ரீனிவாசாடூர் ஆப்பரேட்டர்ஸ் உரிமையாளர் தகவல்

சென்னை: ஸ்ரீனிவாசாடூர் ஆப்பரேட்டர்ஸ் உரிமையாளர் சேஷாத்ரி கூறியதாவது: கடந்த பல ஆண்டுகளாக எண்ணற்ற சுற்றுலாக்கள் குறைந்த கட்டணத்தில் ஏற்பாடுகள் செய்து வருகிறோம். 16 நாட்கள் நேபாள் சுற்றுலாவில் சென்னையில் இருந்து ரயில் மூலம் அலகாபாத் புறப்பட்டு கங்கா, யமுனா, சரஸ்வதி சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் நீராடல். நேரு பிறந்த வீடான ஆனந்தபவன் பார்த்தல், நைமிசாரண்யம், ராமர் பிறந்த அயோத்தி சென்று சரயு நதியில் நீராடல், ராம ஜென்மபூமி பார்த்தல். நேபாளில் புத்தர் பிறந்த இடமான லும்பினி, போக்ரா, ஜோம்ஜோம், முக்திநாத் தரிசனம், காட்மண்டுவில் பசுபதிநாத், புத்த நீல்கண்ட், குஜ்ஜேஸ்வரி சக்தி பீடம் பார்த்து இரவு தங்குதல். மனக்கமனா தேவியை கேபிள்கார் மூலம் தரிசனம் செய்தல்.

காலை சீதாதேவி பிறந்த இடமான ஜனக்பூர் மற்றும் காசி விஸ்வநாதர், காசி விசாலாட்சி, அன்னபூரணி தரிசனம் முடித்து ரயில் மூலம் சென்னை திரும்பலாம். ரயில், பஸ், தங்கும் வசதி, உணவு சேர்த்து ஒருவருக்கு ரூ.18,800 மட்டும். 10 நபருக்கு ஒருவர் இலவசமாக வரலாம். 16 நாட்கள் சார்தாம் யாத்ரா பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி. மே 3, 12,18,27 ஜூன் 2, 11 ஆகிய தேதிகளில் அழைத்து செல்லப்படுகின்றனர். கட்டணம் ரூ.20,800 மட்டும் தான் என்று கூறினார்.

Tags : trip ,Nepal ,Chennai ,Srinivasadur Operators , 16 day trip , Nepal,train from Chennai
× RELATED 2 நாள் பயணமாக நாளை மறுநாள் அமித்ஷா சென்னை வருகிறார்