புதிய மினி கன்ட்ரிமேன் பிளாக் எடிசன்

பி.எம்.டபிள்யூ நிறுவனத்தின் ஓர் அங்கமான மினி கார் நிறுவனம் இந்தியாவில், மினி கூப்பர், மினி கன்ட்ரிமேன், மினி கூப்பர் கான்வெர்ட்டபிள், மினி கிளப்மேன் ஆகிய 4 கார்களை விற்பனை செய்கிறது. தற்போது, அதிக சிறப்பம்சங்கள் கொண்ட வேரியண்ட்டின் அடிப்படையில் மினி கன்ட்ரிமேன் பிளாக் எடிசன் என்ற புதிய மாடலை வெளியிட்டுள்ளது. அதாவது, முடிந்தவரை கருப்பு வண்ண பாகங்களுடன் இந்த கார் மெருகேற்றப்பட்டு, பிளாக் எடிசன் என்ற பெயரில் வந்துள்ளது. மொத்தமாகவே 24 யூனிட்டுகள் மட்டுமே இந்தியாவில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. இந்த காரின் பானட்டில் வரிக்கோடுகள் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்க விஷயம். அத்துடன், ரூப் ரெயில்கள்கூட கருப்பு வண்ணத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த காரில் 18 அங்குல ஜான்கூப்பர் ஒர்க்ஸ் அலாய் வீல், ரன் பிளாட் டயர்கள் ஆகியவை முக்கியத்துவம் பெறுகின்றன. வெளிப்புறத்தில் எந்த அளவுக்கு கருப்பு வண்ண பாகங்கள் மூலமாக தனித்துவமான அழகுடன் மெருகேற்றப்பட்டு இருக்கிறதோ, அதே அளவுக்கு உட்புறத்திலும் பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. ஹெட்ஸ் அப் டிஸ்பிளே, எலெக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் இருக்கைகள், பனோரமிக் சன்ரூப், ஹார்மன் கார்டன் சவுண்ட் சிஸ்டம் ஆகியவையும் இதன் முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.

இந்த காரின் உட்புறமும் முழுக்க முழுக்க கருப்பு வண்ண இன்டீரியராக கொடுக்கப்பட்டுள்ளது. ஜான்கூப்பர் ஒர்க்ஸ் ஸ்டீயரிங் வீல் மற்றும் ஏரோடைனமிக்ஸ் அதிகரிக்க உதவும் விசேஷ ஏரோ கிட் ஆக்சஸெரீகள், இருக்கைகளுக்கு மெமரி பங்ஷன் வசதி ஆகியவையும் உள்ளன. இப்புதிய காரில், 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 189 பிஎச்பி பவரையும், 280 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த காரில், 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மற்றும் பேடில் ஷிப்ட் வசதியும் உள்ளது. இந்த கார், 0-100 கி.மீ வேகத்தை வெறும் 7.5 வினாடிகளில் எட்டிவிடும் திறன் கொண்டது. லிட்டருக்கு 14.41 கி.மீ மைலேஜ் தரும் என்கிறது மினி நிறுவனம். இப்புதிய கார், மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஏ, ஆடி கியூ3, வால்வோ எக்ஸ்சி40 மற்றும் பிஎம்டபிள்யூ எக்ஸ்1 கார்களுக்கு இணையான ரகத்திலும், விலையிலும் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இந்த லிமிடேட் எடிசன் மாடல், சினிமா நட்சத்திரங்களை வெகுவாக கவரும் வாய்ப்புகள் உள்ளன. இப்புதிய மினி கன்ட்ரிமேன் பிளாக் எடிசன் மாடலுக்கு 42.40 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Tags : New Mini Countryman ,Black Edition
× RELATED 'பூங்காற்று திரும்புமா...என் பாட்டை...