×

வீரவநல்லூர் அருகே ஐடிஐ மாணவன் விபத்தில் பலியானது எப்படி?: திடுக்கிடும் தகவல்கள்

வீரவநல்லூர்: வீரவநல்லூர் அருகே ஐடிஐ மாணவன் விபத்தில் பலியானது எப்படி? என்ற திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அடுத்த உப்புவாணியமுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி ராமமூர்த்தி(60). இவருக்கு மாரிச்செல்வம்(18), குகநாதன்(15) ஆகிய இருமகன்கள். இதில் மாரிச்செல்வம் சேரன்மகாதேவி பகுதியில் உள்ள அரசு ஐடிஐயில் முதலாமாண்டு படித்து வந்தார். தினமும் கல்லூரிக்கு பஸ்சில் சென்று வருவது வழக்கம். 2வது மகன் குகநாதன் சேரன்மகாதேவி தனியார் மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார்.
மாரிச்செல்வம் உடல்நிலை சரியில்லை என கூறி கல்லூரிக்கு இரு நாள் விடுப்பு போட்டிருந்தார். நேற்று காலை அவர் கல்லிடைக்குறிச்சியில் உள்ள தாத்தா வீட்டிற்கு சென்றார். அங்கு மதியம் சப்பிட்ட பின், அதே ஊரைச்சேர்ந்த நண்பன் சட்டநாதன் என்பவரிடம், பைக்கை இரவல் வாங்கினார். வெள்ளாங்குளியில் உள்ள நண்பனை பார்த்து விட்டு உடனே வந்து விடுவதாக சட்டநாதனிடம் கூறிவிட்டு அவரது பைக்கில் புறப்பட்டார்.

மதியம் 2.30 மணியளவில் வீரவநல்லூர் மெயின்ரோடு, உப்பாத்து காலனியில் வரும்போது திடீரென்று பைக் கட்டுப்பாட்டை இழந்தது. ரிச்செல்வத்தால் அதை கட்டுப்படுத்த முடியாததால் பைக் அங்கிருந்த மைல் கல்லில் பயங்கரமாக மோதியது. இதில் பலத்த காயத்துடன் ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அவரை, அப்பகுதியினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சேரன்மகாதேவி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், மாரிச்செல்வம் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இதுகுறித்து அவரது தந்தை ராமமூர்த்தி வீரவநல்லூர் போலீசில் தகவல் தெரிவித்தார். இன்ஸ்பெக்டர் சாம்சன் விசாரித்து வருகிறார். விசாரணையில் மாரிச்செல்வம் பைக்கில் அதிவேகமாக சென்றதால் அவரால் பைக்கை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வரமுடியவில்லை. இதனால் இந்த விபத்து நடந்திருப்பதாக அறிந்தனர். இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

விபத்தில் 2 துண்டான பைக்
மாரிச்செல்வம் பைக் விபத்தில் சிக்கியதும் வீரவநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது அவர்கள் கண்ட காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மாரிச்செல்வம் பைக் இரண்டு துண்டாக முன்பக்க வீல்கள் கழன்று தனியாக கிடந்தது. இளம் பருவத்தினர் டூவீலர் ஓட்டும் போது வயது கோளாறு காரணமாக அதி வேகமாக செல்கிறார்கள். சில நேரங்களில் கட்டுப்படுத்த முடியாமல் இதுபோன்று விபத்துக்கள் நிகழ்ந்து விடுகின்றன. எனவே இளைஞர்கள் வாகனங்களை ஓட்டும் போது கவனமாகவும், மிதமான வேகத்திலும் செல்லவேண்டும் என போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.


Tags : student crashes ,ITI ,Veeravanallur Veeravanallur , How ITI ,student,crashes,Veeravanallur
× RELATED மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த...