×

நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு

ஈரோடு: ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறை செங்குந்தர் மகாஜன சங்கத்தின் தலைவர் ஜெகநாதன் தலைமையில் நேற்று 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். அதன்பின், முக்கிய நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களில் சிலரை மட்டும் மனு அளிக்க அனுப்பி வைத்தனர். வேளாண் குறைதீர்க்கும் கூட்டத்தில் இருந்த கலெக்டர் கதிரவனை சந்தித்து புகார் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறையில் சுமார் 300 குடும்பங்கள் வசித்து வருகின்றன. கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு பாவடியாக செயல்பட்ட அந்த இடத்தில் 15 ஆண்டுகளுக்கு முன்பு பத்திரப்பதிவு அலுவலகம் கட்ட இடத்தை எடுத்து அங்கு கட்டிடம் கட்டப்பட்டு செயல்பாட்டில் இருந்து வருகிறது.

மீதமுள்ள இடத்தில் அமைக்கப்பட்டிருந்த பஸ் நிறுத்தம் சிதிலமடைந்து உபயோகத்திற்கு இல்லாமல் போனது. தற்போது மக்கள் தொகை அதிகரிப்பு மற்றும் போக்குவரத்து வசதிக்காக அதே பகுதியில் மீண்டும் பஸ் நிறுத்தம் கட்டவும், சாலையை இந்த நிலம் வரை விரிவாக்கம் செய்யவும் அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.  தற்போது, இதற்கான பணிகள் நடந்து வரும் நிலையில் சில சமூக விரோத சக்திகள் அரசு பணியை தடுத்து நிறுத்தும் வகையில் செயல்பட்டு வருகின்றனர். இந்த பணியை செய்ய விடாமல் தடுத்து வரும் 7 பேர் மீது உரிய நடவடிக்கை எடுத்து பயணிகள் நிழற்குடை, பொதுமக்கள் சுகாதார வளாகம், சாலை விரிவாக்கம் போன்ற பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என கூறி உள்ளனர்.


Tags : land ,occupiers , Petition, action,occupy, land
× RELATED தமிழ்நாட்டில் தயாராகிறது ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்..!!