×

ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பாக்கு உலர வைக்கும் பணி தீவிரம்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பாக்குகள் உலர வைக்கும் பணி தீவிரமாக நடக்கிறது.
பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை சுற்று வட்டார பகுதிகளில், தென்னை சாகுபடி அதிகளவில் நடக்கிறது. இதில் சேத்துமடை, காளியாபுரம், சுப்பேகவுண்டன்புதூர், திம்மம்குத்து, செமனாம்பதி உள்ளிட்ட பகுதிகளில் தென்னைக்கு ஊடுபயிராக பாக்கு அதிகளவு சாகுபடி செய்யப்படுகிறது. இப்பகுதியில் ஆண்டுக்கு சுமார் 10 டன் வரை பாக்கு உற்பத்தியாகிறது.  இங்கு உற்பத்தியாகும் பாக்குகளை, விவசாயிகள் பெரும்பாலும் ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு கொண்டு வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் முதல் பிப்ரவரி மாதம் வரை பாக்கு வரத்து அதிகமாக இருக்கும். விவசாயிகள் கொண்டுவரும் பாக்குகளை குறிப்பிட்ட விலை நிர்ணயம் செய்து வேளாண் அதிகாரிகள் கொள்முதல் செய்கின்றனர்.
 இதில், கடந்த தென்மேற்கு பருவமழைக்கு பிறகு சுற்றுவட்டார கிராமங்களில் பாக்கு உற்பத்தி ஓரளவு இருந்தது.

நன்கு விளைந்த பாக்குகளை அறுவடை செய்து, கடந்த சில வாரமாக ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு, விவசாயிகள் கொண்டுவந்து உலர வைத்து வருகின்றனர். விவசாயிகளிடம் இருந்து வாங்க பெற்ற பாக்குகளை, விற்பனை கூட களத்தில் தொழிலாளர்கள் உலர வைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும், ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு வரும் பாக்குகளை, வெளியூர் வியாபாரிகள் ஒரு கிலோ ரூ.25 முதல் ரூ.30 வரையிலும் நன்கு உளர வைக்ககப்பட்ட முதல் தர பாக்குகள் ரூ. 80 முதல் ரூ. 100 வரை என விலை நிர்ணயம் செய்து வாங்கி செல்கின்றனர். விவசாயிகள் கொண்டுவரும் பாக்குகளை உலர வைத்து இருப்பு வைக்க தனித்தனி குடோன்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இதை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவித்தனர்.

Tags : Anaimalai , Intensity ,drying work , Anaimalai regulatory,stall
× RELATED சுற்று வட்டார பகுதிகளில் வெயிலின்...