×

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிவேகமாக 7,000 ரன்களை கடந்து ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் சாதனை

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிவேகமாக 7,000 ரன்களை கடந்து ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் சாதனை. இந்த சாதனையை அவர் 126 இன்னிங்ஸ் விளையாடி பெற்றுள்ளார்.


அடிலெய்ட் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் முத்த டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி இன்னிங்ஸ் மற்றும் 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்து களமிறங்கியது.

ஆஸ்திரேலியா அணி சார்பில் வார்னர் மற்றும் பர்ன்ஸ் களமிறங்கினர். 4ரன்கள் எடுத்த நிலையில் பர்ன்ஸ்  ஆட்டமிழந்தார். அதனை தொடர்ந்து  களமிறங்கிய மார்னஸ் லாபஸ்ஷேன் சிறப்பாக விளையாடினர். வார்னர், லாபஸ்ஷேன்இருவரும் இணைத்து பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தனர். 162 ரன்கள் எடுத்த நிலையில் லாபஸ்ஷேன்  ஆட்டமிழந்தார்.

அவரை தொடர்ந்து களமிறங்கிய ஸ்மித் 23 ரன்கள் எடுத்த போது டெஸ்ட் போட்டிகளில் குறைந்த இன்னிங்ஸில்  7000 ரன்கள் கடந்த வீரர் என்ற சாதனையை படைத்தார். ஸ்மித் 126 இன்னிங்ஸில்  7000 ரன்களை கடந்துள்ளார். ஸ்மித்திற்கு முன்னதாக இங்கிலாந்து கிரிக்கெட் வீர வால்டர் ஹம்மண்ட் 131 இன்னிங்ஸில்  7000 ரன்கள் எடுத்ததே  சாதனையாக இருந்தது.73 ஆண்டுகள் சாதனையை தகர்த்தார் ஸ்மித்.


alignment=



7000 ரன்களை கடந்த 11வது ஆஸ்திரேலியா வீரர் என்ற பெருமையை பெற்றார் ஸ்டீவன் ஸ்மித். 2010ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் களமிறங்கினார். ஸ்மித் என்பது குறிப்பிடத்தக்கது. டெஸ்ட் போட்டிகளில் ஸ்டீவன் ஸ்மித் 26 சதங்களையும் ,27 அரைசதங்களையும் அடித்துள்ளார். ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியலில் ஸ்டீவன் ஸ்மித் முதலிடத்தில் உள்ளார்.


Tags : Steve Smith ,Australian ,player ,Don Bradman , steve Smith ,Australian player,7000 Test runs,cricet
× RELATED மோடி அரசு தரும் நெருக்கடி:...