மாஜி முதல்வர் பட்நவிசுக்கு கோர்ட் சம்மன்

நாக்பூர்: மகாராஷ்டிரா முன்னாள் முதல்வரான பாஜ.வை சேர்ந்த தேவேந்திர பட்நவிஸ், கடந்த 1996 மற்றும் 1998ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தல்களின்போது வேட்புமனுவுடன் சேர்த்து தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் தன் மீதுள்ள 2  குற்ற வழக்குகள் குறித்த விவரங்களை தெரிவிக்கவில்லை.

அதற்காக அவர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கக்கோரி நாக்பூரை சேர்ந்த வழக்கறிஞர் சதீஷ் உகே நாக்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த தீர்ப்பை மும்பை உயர் நீதிமன்றமும் உறுதி செய்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது,  வழக்கை மீண்டும் கீழ் நீதிமன்றம் விசாரிக்க உத்தரவிடப்பட்டது. அதன்படி, நாக்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றம், பட்நவிசுக்கு நேற்று சம்மன் அனுப்ப உத்தரவிட்டது. இதனால், ஆட்சி பறிபோன நிலையில், பட்நவிசுக்கு அடுத்த பிரச்னை உருவாகி இருக்கிறது.

Tags : Magi CM Patnavis ,Devendra Patnavis , Devendra Patnavis
× RELATED தேவேந்திர பட்நவிசுக்கு எடப்பாடி, ஓபிஎஸ் வாழ்த்து