×

கோத்தபயவை சந்தித்தபின் பிரதமர் மோடி அறிவிப்பு: இலங்கைக்கு இந்தியா ரூ.3,228 கோடி நிதி

புதுடெல்லி: ‘‘தீவிரவாத சவால்களை முறியடிக்க இலங்கைக்கு ரூ.358 கோடி நிதியுதவியும்,  இலங்கையின் வளர்ச்சி திட்டங்களுக்கு ரூ.2870 கோடி கடனுதவியும்  அளிக்கப்படும்’’ என இலங்கை அதிபர் கோத்தபயவை சந்தித்தபின் பிரதமர் மோடி அறிவித்தார். இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தனது முதல் வெளிநாட்டு பயணமாக நேற்று இந்தியா வந்தார். இங்கு அவர் 3 நாள் பயணம் மேற்கொள்கிறார். டெல்லியில் அவரை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் ஆகியோர் சந்தித்து, இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் பிராந்திய விஷயங்கள் குறித்து பேசினார்கள்.

முப்படை அணிவகுப்பு மரியாதையை ஏற்றபின் கோத்தபய அளித்த பேட்டியில். பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சி மற்றும் இருநாட்டு மக்கள் நலன் தொடர்பான விஷயங்களில் இந்தியாவும், இலங்கையும் இணைந்து செயல்பட வேண்டும். இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் விடுவிக்கப்படுவர். அவர்களின் படகுகளும் விடுவிக்கப்படும் என்றார். அதன்பின் பிரதமர் மோடியும், கோத்தபயவும் சந்தித்து பேசினார்கள். அதன்பின் பிரதமர் மோடி அளித்த பேட்டியில், இலங்கை தமிழர்களின் விருப்பங்களை நிறைவேற்றி மறுவாழ்வு பணிகளை இலங்கை அரசு மேற்கொள்ளும் என நம்புகிறேன் என்றார்.

ரூ.3,228 கோடி நிதி: இலங்கை அதிபர் கோத்தபய உடன் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு, பிரதமர் மோடி வெளியிட்ட அறிவிப்பில், ‘தீவிரவாத சவால்களை முறியடிக்க இலங்கைக்கு ரூ.358 கோடி நிதியுதவியும், இலங்கையின் வளர்ச்சி திட்டங்களுக்கு ரூ.2870 கோடி கடனுதவியும் அளிக்கப்படும்,’’ என்றார்.

Tags : Modi ,India ,Gotabhaya ,Sri Lanka , Sri Lanka
× RELATED நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த நடிகர் பிரகாஷ்ராஜ் அழைப்பு