×

செல்லாத 500, 1000 ரூபாய் நோட்டுகளுடன் தவித்து வந்த மூதாட்டிகளுக்கு முதியோர் உதவித்தொகை

திருப்பூர்: திருப்பூரில், பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளுடன் தவித்து வரும் மூதாட்டிகளுக்கு இலவசமாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. முதியோர் உதவித்தொகை கிடைக்கவும் கலெக்டர் நடவடிக்கை எடுத்துள்ளனர். திருப்பூர் மாவட்டம், பல்லடம் வட்டம், பூமலூர் ஊராட்சியை சேர்ந்த சகோதரிகளில் மூத்தவர் ரங்கம்மாள் (82). இவருக்கு 2 மகன்கள், 4 பெண்கள். இளையவர் ரங்கம்மாள் (78). இவருக்கு 3 மகன்கள், 3 மகள்கள். இவர்கள் அனைவரும் கூலி வேலை செய்து வருகின்றனர். இவர்களது கணவர்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில் தனியாக ஓட்டு வீட்டில் வசித்து வருகின்றனர்.

சில நாட்களுக்கு முன்பாக மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக இருவரும் சேமித்து வைத்திருந்த ரூ.46 ஆயிரத்தை எடுத்து மகன்களிடம் கொடுத்துள்ளனர். அந்த நோட்டுகள் அனைத்தும் மத்திய அரசால் செல்லாது என அறிவிக்கப்பட்ட பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளாகும். இதனை பார்த்த மகன்கள் அதிர்ச்சியடைந்தனர். பண மதிப்பு நீக்க விவகாரம் தெரியாமல் மூதாட்டிகள் இருவரும் அந்த பணத்தை எடுக்காமல் வைத்துள்ளனர். இதுகுறித்து, பத்திரிகை மற்றும் ஊடகங்களில் செய்தி வெளியானது. இதையடுத்து, மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் உத்தரவின்பேரில் பல்லடம் தாசில்தார் சிவசுப்பிரமணி, வருவாய் அலுவலர் சதீஸ் ஆகியோர் நேற்று முன்தினம் மூதாட்டிகளை சந்தித்து விசாரித்தனர்.

மூத்த சகோதரி ரங்கம்மாள், காச நோய் சிகிச்சை மேற்கொண்டு வந்துள்ளார். மேல் சிகிச்சைக்கு ஈரோடு மாவட்டத்திற்கு குடும்பத்தினர் அழைத்து சென்றபோது பணம் செல்லாது என்பது தெரியவந்துள்ளது. எனவே, மூதாட்டிகளுக்கு சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவு அளித்துள்ளது. மேலும் 2 பேருக்கும் முதியோர் உதவித்தொகைக்கான ஆணையை கலெக்டர் வழங்கினார்.

Tags : elders , Allowances
× RELATED எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கான கல்வி...