×

7 பேருக்கு பணி நியமன ஆணை

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று தலைமை செயலகத்தில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் கீழ் செயல்படும் தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிக இயக்குநரகத்திற்கு 32 உதவி பொறியாளர் (தொழில்கள்) மற்றும் 2 முதுநிலை வேதியியலாளர் பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 7 பேருக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.நிகழ்ச்சியில்,  துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ஊரக தொழில் துறை அமைச்சர் பெஞ்சமின், தலைமை செயலாளர் சண்முகம், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை செயலாளர் ராஜேந்திர குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags : Employment Order
× RELATED மேம்பால பணி காரணமாக தியாகராயர் நகரில் போக்குவரத்து மாற்றம்