குடிநீர் வாரிய பணிமனை அலுவலகம் இடமாற்றம்

சென்னை: சென்னை குடிநீர் வாரிய பணிமனை 68க்கான அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை குடிநீர் வாரியம், பகுதி 6க்கு உட்பட்ட பணிமனை 68, எண்.238, பேப்பர் மில்ஸ் சாலை (தீட்டித் தோட்டம் பிரதான சாலை), பெரம்பூர், சென்னை-11 என்ற முகவரியில் இயங்கி வந்தது. இந்த பணிமனை அலுவலகம் நேற்று முதல் செம்பியம் பம்பிங் ஸ்டேஷன், எண்.39/14, தீட்டித் தோட்டம் 1வது தெரு, பெரம்பூர், சென்னை-11  என்ற  முகவரியில், இயங்கி வருகிறது.  

எனவே, பொதுமக்கள் குடிநீர் மற்றும் கழிவுநீர் சம்பந்தப்பட்ட புகார்கள் மற்றும் குடிநீர் வரி மற்றும் கட்டணம் செலுத்தவும் இந்த அலுவலகத்துக்கு செல்ல கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் பணிமனை  பொறியாளரை 81449 30068 என்ற செல்போன் எண்ணிலும், துணைப் பகுதி பொறியாளரை 81449 30216 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.


Tags : Office Transfer ,Drinking Water Board ,Drinking Water Board Office , Transfer of Drinking, Water Board Office
× RELATED குடிநீர் வாரிய அலுவலகம் இடமாற்றம்