×

இலங்கை, மலேசியாவில் இருந்து கடத்திய 1.18 கோடி தங்கம் பறிமுதல்

சென்னை: இலங்கையில் இருந்து நேற்று அதிகாலை 5.30 மணிக்கு தனியார் பயணிகள் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தது. இந்த விமானம், மீண்டும் டெல்லிக்கு புறப்பட வேண்டும் என்பதால், விமானத்தை சுத்தம் செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். அப்போது, விமானத்தின் இருக்கை ஒன்று சற்று மேலே தூக்கி கொண்டிருந்தது. அதை  ஊழியர்கள் சரி செய்ய முயன்றபோது, ஒரு பார்சல் இருந்தது. பின்னர் சுங்க அதிகாரிகள் வந்து அந்த பார்சலை பிரித்தபோது 23 தங்கக்கட்டிகள் இருந்தன. இதன் எடை 2.7 கிலோ. மதிப்பு 1 கோடி. அவற்றை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, விமானத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்த்தனர். வருகை பதிவேட்டையும் ஆய்வு செய்தனர். சர்வதேச தங்கம் கடத்தல் கும்பலை சேர்ந்த ஆசாமி, விமான நிலையத்தில் கெடுபிடிகள் அதிகமாக இருந்ததால் தங்கக்கட்டிகளை சீட்டில் மறைத்து வைத்து விட்டு தப்பியது தெரிய வந்தது.

இதுபோல், மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து ஏர் இந்தியா விமானம் நேற்று காலை 7.45 மணிக்கு சென்னை வந்தது. மலேசியாவை சேர்ந்த பைசல் அகமது பின் அஸ்ரப் அலி (40) என்பவர் சுற்றுலா பயணி விசாவில் சென்னைக்கு வந்தார். அவரை சோதனை செய்தபோது, உடைக்குள் சிறு சிறு தங்க துண்டுகள் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். இதன் எடை 540 கிராம். மதிப்பு 18.5 லட்சம். இதையடுத்து சுங்க அதிகாரிகள் மலேசிய பயணியை கைது செய்து தங்க கட்டிகளை பறிமுதல் செய்தனர்.

Tags : Malaysia ,Sri Lanka , 1.18 crore gold seized, Sri Lanka and Malaysia
× RELATED போலி பாஸ்போர்ட் மூலம் சென்னையில்...