தங்கத்துக்கு ஹால்மார்க் கட்டாயம்

புதுடெல்லி: தங்கத்தின் தரத்தை உறுதி செய்யப் பயன்படும் ஹால்மார்க் முத்திரை வரும் 2021ம் ஆண்டு ஜனவரி 15 முதல் கட்டாயமாக்கப்படுவதாக மத்திய நுகர்வோர் விவகாரத் துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று கூறுகையில், `தங்கநகைகளுக்கு ஹால் மார்க் முத்திரை கட்டாயமாக்கப்படுவது தொடர்பாக இந்த துறை அடுத்த ஆண்டு ஜனவரி 15 ம் தேதி அறிவிப்பு வெளியிடும். இந்த திட்டத்தை அமல்படுத்த 1 ஆண்டு அவகாசம் வழங்கப்படும். எனவே நகைக்கடைக்காரர்கள் இந்த காலவரம்பிற்குள் தங்களிடம் உள்ள ஹால் மார்க் முத்திரையில்லாத நகைகளை விற்பனை செய்து கொள்ளவேண்டும் என தெரிவித்தார்.

Related Stories:

>