ஜப்பானில் 101 வயது மாஜி பிரதமர் மரணம்

டோக்கியோ: ஜப்பானின் மிக மூத்த பிரதமரான யசுஹிரோ நகாசோனி நேற்று காலானார். அவருக்கு வயது 101. ஜப்பானில் கடந்த 1982ம்  ஆண்டு முதல் 1987 வரை 5 ஆண்டுகள் பிரதமராக பதவி வகித்தவர் யசுஹிரோ நாகசோனி. ஜனநாயக கட்சி தலைவரான அவர், இரண்டாம் உலகப் போரில் தோற்ற நாடு என்ற ஜப்பான் மீதான களங்கத்தை துடைத்தவர். தனது பதவிக்காலத்தில் அமெரிக்கா உடனான உறவை பலப்படுத்தினார். அப்போது அமெரிக்க அதிபர் டொனால்ட் ரீகனுடன் நட்பு பாராட்டினார்.

இதனால், ஜப்பானின் பாதுகாப்பை பலப்படுத்தியதோடு, அமெரிக்காவின் உதவியோடு பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தினார். ஜப்பானின் மிக வயதான முன்னாள் பிரதமரான அவர் நேற்று காலமானதாக அவரது மகனும் எம்பியுமான ஹிரோபமி உறுதிபடுத்தி உள்ளார்.

Related Stories:

>