×

ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தியது வெஸ்ட் இண்டீஸ்

லக்னோ: ஆப்கானிஸ்தான் அணியுடனான டெஸ்ட் போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது.
லக்னோவில்  நடைபெற்ற இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த ஆப்கானிஸ்தான் முதல் இன்னிங்சில் 187 ரன்னுக்கு சுருண்டது. வெஸ்ட் இண்டீஸ் ஸ்பின்னர் கார்ன்வால் 7 விக்கெட் அள்ளினார். அடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் 83.3 ஓவரில் 277 ரன் எடுத்து ஆல் அவுட்டானது.
 
அந்த அணியின் ஷாம்ரா புரூக்ஸ் 111 ரன் விளாசினார். 90 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய ஆப்கான் 2ம் நாள் ஆட்ட முடிவில் 7 விக்கெட்  இழப்புக்கு 109 ரன் எடுத்திருந்தது. நேற்று அந்த அணி 2வது இன்னிங்சில் 120 ரன்னுக்கு ஆட்டமிழந்தது (43.1 ஓவர்). இப்ராகிம் ஸத்ரன் 23, ஜாவேத் அகமதி 62, நசீர் ஜமால் 15 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்னில் வெளியேறினர். ஹோல்டர், கார்ன்வால், சேஸ் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். 31 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ், 6.2 ஓவரில் 1 விக்கெட் இழப்புக்கு 33 ரன் எடுத்து எளிதாக வென்றது. இப்போட்டியில் 10 விக்கெட் வீழ்த்திய ரகீம் கார்ன்வால் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

Tags : West Indies ,Afghanistan , West Indies beat ,Afghanistan
× RELATED டி20 உலகக்கோப்பை 2024: தான் தேர்வு செய்த...