×

வார்னர், மார்னஸ் விளாசலில் ஆஸ்திரேலியா ரன் குவிப்பு

அடிலெய்டு: பாகிஸ்தான் அணியுடனான 2வது டெஸ்டில், ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் ஒரு விக்கெட் இழப்புக்கு 302 ரன் குவித்துள்ளது. அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நேற்று தொடங்கிய இப்போட்டியில், டாசில் வென்ற ஆஸ்திரேலியா முதல் நாள் ஆட்ட முடிவில் 1 விக்கெட் மட்டுமே இழந்து 302 ரன் எடுத்துள்ளது. ஜோ பர்ன்ஸ் 4 ரன்னில் ஆட்டமிழந்தார். டேவிட் வார்னர் 166 ரன் (228 பந்து, 19 பவுண்டரி), மார்னஸ் லாபஸ்ஷேன் 126 ரன்னுடன் (205 பந்து, 17 பவுண்டரி) களத்தில் உள்ளனர். இன்று 2வது நாள் ஆட்டம் நடக்கிறது.

Tags : Marnus Varasal ,Australia ,Warner , Warner, Australia run, focussed on Marnus Varasal
× RELATED ஆஸி. ஷாப்பிங் மாலில் கத்தி குத்து...