×

மிதுன் ஒரே ஓவரில் 5 விக்கெட் முஷ்டாக் அலி டி20 பைனலில் கர்நாடகா

சூரத்: சையது முஷ்டாக் அலி டி20 தொடரின் அரை இறுதியில், 8 விக்கெட் வித்தியாசத்தில் அரியானா அணியை வீழ்த்திய கர்நாடகா இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. சூரத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், அரியானா அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 194 ரன் குவித்தது. கர்நாடகா அணியின் அபிமன்யு மிதுன் வீசிய 20வது ஓவரில் ஹாட்ரிக் உட்பட 5 விக்கெட் கைப்பற்றி சாதனை படைத்தார். அடுத்து களமிறங்கிய கர்நாடகா 15 ஓவரிலேயே 2 விக்கெட் இழப்புக்கு 195 ரன் எடுத்து அபாரமாக வென்று பைனலுக்கு தகுதி பெற்றது.

படிக்கல் 87 ரன் (42 பந்து, 11 பவுண்டரி, 4 சிக்சர்), கே.எல்.ராகுல் 66 ரன் (31 பந்து, 4 பவுண்டரி, 6 சிக்சர்), அகர்வால் 30* ரன் விளாசினர். தமிழகம் - ராஜஸ்தான் அணிகளிடையேயான 2வது அரை இறுதியில் வெற்றி பெறும் அணியுடன் கர்நாடகா நாளை இறுதிப் போட்டியில் மோதும்.

Tags : Mithun Karnataka 5th Mushtaq Ali T20 ,Mushtaq Ali T20 Final , Mithun Karnataka, 5th Mushtaq Ali ,T20 Final
× RELATED ஐபிஎல் டி20 கிரிக்கெட்; பெங்களூரு – கொல்கத்தா இன்று மோதல்