உபி.யில் சத்துணவு திட்டத்தில் கோல்மால் ஒரு லிட்டர் பாலில் ஒரு பக்கெட் தண்ணீர் கலப்பு : 81 மாணவர்களுக்கு வழங்கிய வீடியோ வைரல்

சோன்பத்ரா: உபி.யில் ஒரு பக்கெட் தண்ணீரில் ஒரு லிட்டர் பால் கலந்து 81 மாணவர்களுக்கு  வழங்கப்பட்ட  வீடியோ வைரலாக பரவி வருகிறது. உத்தரபிரதேசத்தில் பள்ளி மாணவர்களுக்கு நண்பகலில் ஊட்டச்சத்துக்காக சத்துணவு வழங்கப்படுகிறது. இதில், பாலும் வழங்கப்படுகிறது. இந்நிலையில், இங்குள்ள சோபான் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கோடா கிராம பஞ்சாயத்தில் உள்ள சாலைபான்வா ஆரம்ப பள்ளியில், கடந்த புதன்கிழமை மாணவர்களுக்கு சத்துணவு வழங்கப்பட்டது. அப்போது, அங்கு சமையல் செய்யும் பெண்  ஒருவர் ஒரு பக்கெட் முழுவதும் நீரை எடுத்து அதில் ஒரு லிட்டர் பாலை கலந்தார்.  பின்னர் அதை 81 மாணவ, மாணவிகளுக்கு வழங்கினார். இந்த வீடியோ காட்சி, வைரலாக பரவி வருகிறது.

இந்த வீடியோ பற்றி அறிந்த மாவட்ட ஆட்சியர் ராஜலிங்கம், நேற்று பள்ளிக்கு நேரில் சென்று விசாரித்தார்.அப்போது, பாலில் கலப்படம் செய்து மாணவர்களுக்கு விநியோதித்த பள்ளி ஆசிரியரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். சமையல்கார பெண் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் மாதம் மிர்சாபூர் மாவட்டத்தில் உள்ள பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ள உப்பு வழங்கப்பட்ட நிலையில், தற்போது பாலில் கலப்படம் செய்து விநியோகம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories:

>