×

சேத்தியாத்தோப்பு அருகே சேறும் சகதியுமான வாழக்கொல்லை கிராம சாலை

சேத்தியாத்தோப்பு: சேறும் சகதியுமாக உள்ள வாழக் கொல்லை கிராமசாலையில் நடந்து செல்ல முடியாமல் பொதுமக்கள், மாணவ, மாணவிகள் அவதிப்படுகின்றனர். இதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடலூர் மாவட்டம் கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்டது வாழக்கொல்லை ஊராட்சி. இக்கிராமத்தில் சுமார் 800க்கும் மேற்பட்ட குடியிருப்புகளும் ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட குடியிருப்புவாசிகளும் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இக்கிராமத்திற் குட்பட்ட தெற்கு தெருவில் ஆறு மாதத்திற்கு முன்பு சாலை பணி துவங்கி செம்மண்ணை கொட்டி சமன் செய்த நிலையில் அப்படியே கிடப்பில் போட்டு விட்டனர்.   தற்போது பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால் சாலையில் ே செம்மண் சேறும் சகதியுமாய் காட்சியளிக்கின்றது.

இதனால் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள், குழந்தைகள் மற்றும் மாணவர்கள் சேறும் சகதியுமான சாலையில் நடந்து சென்று அவதிப்படுகின்றனர். இதனால் சேற்றுப்புண் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்படுகின்றனர்.  இதுகுறித்து வட்டார வளர்ச்சி அதிகாரிகளிடமும், ஊராட்சி செயலாளரிடமும் முறையிட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க முன்வரவில்லை, இரு சக்கர வாகனங்கள், மிதிவண்டிகளில் செல்பவர்கள் சேற்றில் சிக்கி விமுந்தும் வருகின்றனர். விபத்து அவசர சிகிச்சைக்காக செல்பவர்களும், அரசு பணியில் உள்ளவர்களும். குறித்த நேரத்திற்கு செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். இவ்வாறு போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் இந்த சாலை இருந்து வருகின்றது, எனவே மாவட்ட நிர்வாகம் விரைந்து தரமான தார்சாலையாக அமைத்து கொடுக்க வேண்டும். நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் கிராம மக்கள் ஒன்று திரண்டு நாற்று நடும் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Tags : Village road ,slopes ,roads , Sloppy roads, students and people suffering
× RELATED மழைக்கு பஞ்சரான சாலைகள் இது ஸ்மார்ட்...