×

சைக்கிளை மீட்டு தரக்கோரி காவல்நிலையத்தில் கேரள சிறுவன் கொடுத்த புகார்: உடனடி ஆக்சன் எடுத்த காவல்துறை!

திருவனந்தபுரம்: பழுதுபார்க்கக் கொடுத்தத் தனது சைக்கிளை கடைக்காரரிடமிருந்து மீட்டுக் கொடுக்க வேண்டி கேரளாவைச் சேர்ந்த பள்ளி மாணவர் ஒருவர் தனது நோட்டு புத்தகத்தின் தாளிலேயே காவல்துறைக்கு அளித்த புகார் மனு அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது. அந்த மாணவன் தன கைப்பட எளிதிய புகார் கடிதமும் இணையத்தில் வைரலாகி வருகிறது. கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் விளையாட்டூரைச் சேர்ந்தவர் அபின் என்ற 10 வயது சிறுவன் மேப்பையூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளான். அதில், நான் கடந்த செப்டம்பர் 5-ம் தேதியில் எனது மற்றும் என் சகோதரரின் சைக்கிள்களை பழுது பார்க்க அருகிலுள்ள சைக்கிள் கடையில் கொடுத்தேன். அதை பழுது பார்ப்பதற்காக ரூ.200 பணமும் கொடுத்தேன். ஆனால், இரண்டு மாதங்களாகியும் இன்று வரை அந்த சைக்கிள் கடைக்காரர் எங்களின் சைக்கிள்களை திரும்பத்தரவில்லை. நாங்கள் பலமுறை கேட்டும் முறையான பதிலில்லை. சில நேரங்களில் போன் அழைப்பையும் அவர் ஏற்பதில்லை. எங்கள் சைக்கிளை மீட்டுத்தரவும் என மலையாளத்தில் எழுதப்பட்டிருந்தது.

இதைக் கண்டு வியப்படைந்த போலீசார் உடனே அந்தக் கடைக்கு விரைந்து விசாரனை நடத்தியுள்ளனர். அப்போது அருகில் இருந்தவர்கள், அவருடைய மகன் திருமணத்தில் பிஸியாக உள்ளார் என்று கூறியுள்ளனர். பின் அவருடைய வீட்டை கண்டுபிடித்து சைக்கிளை உடனே பழுது பார்த்துத் தரச்சொல்லி அதை நேற்று அபினிடம் கொடுத்துள்ளனர். இந்த சம்பவத்தை கேரள போலீஸ் தங்களுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் ’புகார் தீர்த்து வைக்கப்பட்டது’ என்று போஸ்ட் செய்துள்ளனர். இது தொடர்பாக பேசிய காவல்நிலைய அதிகாரி அடிக்கடி பள்ளி மாணவர்களிடமிருந்து ஏதாவது புகார் மனுக்கள் வரும். அதில், இந்த குறிப்பிட்ட புகார் மனு எங்களை வெகுவாகக் கவர்ந்தது. அந்த மாணவன் அளித்த புகார் தொடர்பாக விசாரித்த போது, சம்பந்தப்பட்ட சைக்கிள் கடைக்காரர் உடல்நலக் குறைவு காரணமாகவும் தனது மகனின் திருமண வேலைகளாலும் சைக்கிளை பழுது பார்ப்பது தாமதமானதாக விளக்க அளித்துள்ளார்.

Tags : Kerala ,police station ,Bikkari , Kerala boy, bicycle, complainant, police, viral
× RELATED கம்பம் போலீஸ் நிலையத்தில் அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்