×

பட்டினம்பாக்கம் கடலில் பொங்கும் நுரை: அடையாற்றிலிருந்து ரசாயன கழிவுநீர் கலப்பதே காரணம் என மக்கள் புகார்!

சென்னை: சென்னை பட்டினம்பாக்கம் கடற்பகுதியில் அதிக அளவில் நுரை தேங்கி இருப்பதால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. காலை முதல் ரசாயன நுரைகள் பொங்கி வருவதால் என்ன காரணம் என்று தெரியாமல் மக்கள் குழம்பியுள்ளனர். பட்டினப்பாக்கம் ஸ்ரீனிவாசபுரம் கடல் பகுதியில் அலைகள் மூலமாக முறைகள் வெளியே தள்ளப்பட்டு வருகிறது. மேலும் கடற்கரை முழுவதும் வெள்ளை நிற நுரைகள் மட்டுமே  காட்சியளிக்கிறது. ஸ்ரீனிவாசபுரம் கடல்பகுதியில் அடையாறு பகுதியில் இருந்து வரக்கூடிய கழிவுநீர் கலக்கப்படுகிறது. கடந்த 2 நாட்களாக சென்னையில் மழை அதிகமாக பெய்து வருவதால் கழிவுநீர் மற்றும் மழைநீர் இரண்டுமே அதிகமாக  கடலில் கலக்கப்பட்டு வருகிறது. இந்த கழிவுநீரானது கடல் அலைகளின் வேகம் காரணமாக கடலின் உள்பகுதியில் கலக்காமல் கரையோரமாக சுழன்று வருகிறது. இதன் காரணமாக கழிவுநீரில் உள்ள ராசாயனம் நுரையாக மாறி கரை ஒதுங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, அப்பகுதியில் உள்ள மீனவர்கள் கூறுகையில், கழிவுநீர்  காரணமாகவே நுரை பொங்கி வருவதாகவுகம், ஓரிரு நாட்களில் இது சரியாகிவிடும் எனவும் தெரிவித்துள்ளனர். மேலும், இதுபோன்று அலைகளில் இருந்து நுரை வருவது முதல்முறை அல்ல என்றும் கூறியுள்ளனர். அதேபோல, கழிவுநீர் காரணமாக நுரைகள் வெளியே தள்ளப்படுவதால் கடலில் உள்ள டிடிஎஸ் மற்றும் குளோரைடின் அளவு அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வரை, கடல்வாழ் உயிரினங்களுக்கு இதனால் பாதிப்பு ஏற்படவில்லை என்றும், இதேபோன்ற நிலை நீடித்தால் கடல்வாழ் உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படும் எனவும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், கழிவுநீரை கடலில் கலப்பதால் மாசுபாடு மற்றும் கடல்வாழ்  பகுதி மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது என அப்பகுதி மக்கள் கூறியுள்ளார். இதனை தடுக்க தகுந்த நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : Pattinambakkam ,sea ,enclosure ,Sea of Foam , Pattinappakkam, sea, sewage, foam, chemical
× RELATED கன்னியாகுமரியில் கடல் சீற்றத்துக்கான...