×

ஐதராபாத்தில் பெண் கால்நடை மருத்துவரை எரித்து கொலை செய்த வழக்கில் தேடப்பட்ட நபர்கள் கைது

ஐதராபாத்: ஐதராபாத்தில் பெண் கால்நடை மருத்துவரை எரித்து கொலை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளிகளை கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள அவர்களிடம் ஐதராபாத் போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர். ஐதராபாத்தில் உள்ள சம்ஷா பாத் நரசய்யாபள்ளியை சேர்ந்த ஸ்ரீதர் விஜயம்மா தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள். அவர்களில் பிரியங்கா கால்நடை மருத்துவராகவும், பவ்யா விமானநிலைய ஊழியராகவும் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்னர் மருத்துவமனைக்கு வேலைக்கு சென்று வீடு திரும்பிய பிரியங்கா அன்று மாலை கால்நடை ஒன்றுக்கு அவசரமாக சிகிச்சை அளிக்க வேண்டும் என்று வீட்டில் கூறிவிட்டு தனது மொபட்டில் புறப்பட்டு சென்றார்.

இரவு 9 மணி வரை பிரியங்கா வீடு விரும்பவில்லை. சற்று நேரத்தில் தன்னுடைய தங்கை பவ்யாவுக்கு போன் செய்த பிரியங்கா, மொபட் கீழே விழுந்து ரிப்பேர் ஆகிவிட்டது. சுற்றுவட்டாரப் பகுதிகளில் லாரி டிரைவர்களை தவிர யாரையும் காணவில்லை. அவர்கள் வண்டியை பழுது பார்த்துக்கொண்டிருக்கின்றனர் என்றும் அவர்கள் என்னைப் பார்க்கும் பார்வை சரியாக இல்லை. எனக்கு பயமாக இருக்கிறது என்று கூறி தொலைபேசி இணைப்பை துண்டித்திருக்கிறார்.  

இரவு 9.45 மணிக்கு ப்ரியங்காவின் போன் சுவிட்ச் ஆப் ஆகியுள்ளது. இதனால் பயந்து போன அவரது குடும்பத்தினர் உடனே காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் பல்வேறு இடங்களில் தேடிய நிலையில் மேம்பாலம் ஒன்றின் கீழ் இளம்பெண் ஒருவரின் உடல் எரிந்த நிலையில் கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற காவல்துறையினர் பிரியங்கா குடும்பத்தாரை வரவழைத்து அந்த உடலை காண்பித்தனர். பிரியங்கா குடும்பத்தார் அது பிரியங்கா என்று உறுதி செய்தனர். இந்நிலையில் இந்த கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளிகைள ஐதராபாத் போலீசார் கைது செய்துள்ளனர்.


Tags : woman veterinarian ,Hyderabad ,murder ,death ,veterinarian , Hyderabad, female veterinarian, burnt to death, arrested by criminals
× RELATED நாட்டையே உலுக்கிய ரோஹித் வெமுலா...