×

வெளிநாடுகளில் இருந்து அதிகளவிலான பணத்தை தாய்நாட்டுக்கு அனுப்புவதில் இந்தியா தொடர்ந்து முதலிடம்

டெல்லி: வெளிநாடுகளிலிருந்து அதிகளவிலான பணத்தை தாய்நாட்டுக்கு அனுப்புவதில் இந்தியா முதலிடமும், சீனா இரண்டாவது இடமும் பிடித்துள்ளது. ஆசிய பசிபிக் பிராந்தியத்தை சேர்ந்த வெளிநாடுகளில் வேலை செய்பவர்கள் அதிகளவிலான பணத்தை தாய் நாட்டிற்கு அனுப்பியவர்களின் பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. பணத்தை தாய் நாட்டிற்கு அனுப்பியவர்கள் பட்டியலில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்துள்ளது. உலகம் முழுவதும் பணி வாய்ப்புகளை தேடி செல்பவர்கள், அங்கு சம்பாதிக்கும் பணத்தை தாய்நாட்டிலுள்ள தங்களின் குடும்பங்களுக்கு அனுப்புவர். அவ்வகையில், உலகின் பல்வேறு நாடுகளில் பணியாற்றும் இந்தியர்கள், கடந்த 2018ம் ஆண்டில் 78.6 பில்லியன் டாலர் தொகை தாய்நாட்டுக்கு அனுப்பியுள்ளனர்.

இந்தியாவில் இருந்து உலகின் பல நாடுகளுக்கு புலம் பெயர்ந்தோர் எண்ணிக்கை மிகப்பெரியது. இதனால் மிக அதிகளவிலான பணத்தை தாயகத்திற்கு அனுப்பி வைத்த நாடுகளின் பட்டியலில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இதற்கு அடுத்ததாக சீனா 2வது இடத்தில் இருக்கிறது. கடந்த ஆண்டில் சீனர்கள் தாய்நாட்டிற்கு 67.41 பில்லியன் டாலர் தொகையை அனுப்பி வைத்துள்ளனர். ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் வசிக்கும் 400 கோடி மக்களில் பத்து பேரில் ஒருவர் வெளிநாடுகளில் இருந்து பணம் அனுப்புகிற நபராகவோ, வெளிநாடுகளில் இருந்து வரும் நிதியால் உதவி பெறுபவராகவோ உள்ளனர். இதனை தொடர்ந்து, வெளிநாடுகளில் வேலை செய்பவர்கள் இந்தியாவிற்கு அனுப்பும் பணத்தின் பெரும் பகுதி கிராமப்புற பகுதிகளுக்கு செல்வதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : India ,recipient , Away, Money, homeland, India, topping
× RELATED களை கட்டிய மாம்பழ சீசன் பழக்கடைகளில்...