இலங்கை மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் இந்தியா செய்யும்: பிரதமர் நரேந்திர மோடி பேட்டி

புதுடெல்லி: இலங்கை மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் இந்தியா செய்யும் என்று இலங்கை அதிபர் அதிபர் கோத்தபய ராஜபக்சேவுடன் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். மேலும் பேசிய அவர், இந்தியா-இலங்கை இடையே கடல்வழி வணிகத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பாதுகாப்பு விவகாரத்தில் ராணுவ ரீதியாகவும் இலங்கையுடன் இணைந்து இந்தியா செயல்படும் எனவும் கூறியுள்ளார். இந்நிலையில், இலங்கையில் உள்ள தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களின் படகுகள் விடுவிக்கப்படும் என்று அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்சே உறுதியளித்துள்ளார்.Tags : India ,Sri Lankan , Prime Minister Modi, President of Sri Lanka, Gotabhaya Rajapaksa
× RELATED இந்தியாவில் 7 பேரில் ஒருவருக்கு மனநோய்